மீண்டும் பிரீத்தி கற்பழிப்பு வழக்கு... கைதாவாரா மதுர் பண்டார்கர்?

தேசிய விருது பெற்ற சாந்தினி பார், டிராபிக் சிக்னல் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் மதுர் பண்டார்கர். 1999 முதல் 2004-ம் ஆண்டு வரை ஆசை வார்த்தை கூறி தன்னை மதூர் பண்டார்சன் பல முறை கற்பழித்துவிட்டார் என இந்தி நடிகை பிரீத்தி ஜெயின் வழக்குத் தொடர்ந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் பிரீத்தி ஜெயின் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று அறிக்கை அளித்துவிட்டனர். ஆனால் ப்ரீத்தி தன் வழக்கை வாபஸ் பெறவில்லை. 2009-ல் மீண்டும் இந்த வழக்கை விசாரிக்குமாறு நீதிமன்றத்தை நாடினார்.
நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட இவ்வழக்கு விசாரணை தற்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது.
மதூர் பண்டார்சன் வழக்கு விசாரணைக்காக அடுத்த மாதம் 18-ந்தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப அந்தேரியில் உள்ள நடமாடும் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அவர் அன்றைய தினம் ஆஜராக தவறினால் கைது செய்து ஆஜர்படுத்தப்படுவார் என்று பிரீத்தி ஜெயின் வக்கீல் குஞ்சுராமன் தெரிவித்தார்.
மதுர் பண்டார்கர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 376 மற்றும் 506 பிரிவு 2-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெண்களை செக்ஸ் பொம்மையாக நினைக்கும் மதுர் பண்டார்கர் போன்ற ஆண்களுக்கு இந்த வழக்கு மூலம் பாடம் கற்பிப்பேன் என்று ப்ரீத்தி ஜெயின் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











