யானைகளை மையப்படுத்தி பிரபு சாலமன் எடுக்கும் புதுபடம்!
மைனா படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் பிரபு சாலமன், தனது அடுத்த படத்தை யானைகளை மையமாக வைத்து எடுக்கிறார்.
இதற்காக, யானைகள் அதிகம் உள்ள கேரள காட்டுப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளார். தன்னுடன் இசையமைப்பாளர் இமானையும் அவர் அழைத்துச் சென்றார்.
இந்தப் படம் குறித்து பிரபு சாலமன் கூறுகையில், "அடுத்த படத்துக்கான முன் தயாரிப்பு பணிகளை முடித்துவிட்டேன். யானைகளை மையமாக வைத்து உருவாகும் படம் இது.
தினமும் செய்திகளில் யானைகள் அட்டகாசம், யானைௌ மிதித்து மனிதன் பலி என்றெல்லாம் செய்திகளைப் படிக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் என்னவென்று ஆராய்ந்து திரைக்கதையை எழுதியிருக்கிறேன். இதற்காக குரங்கணி உள்ளிட்ட வனப் பகுதிகளில் சுமார் மூவாயிரம் கிலோ மீட்டர் வரை பயணம் செய்து யானைகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டேன்.
இந்தப் பின்னணியில் ஒரு இளம் ஜோடியின் காதலைச் சொல்லியிருக்கிறேன். வெறும் பரபரப்புக்காக கதை சொல்லாமல், யானைகள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வும் இதில் சொல்ல முயற்சித்துள்ளேன்," என்றார்.
இப்போது நார்வே திரைப்பட விழாவுக்காக ஆஸ்லோ சென்றுள்ள பிரபு சாலமன், விழா முடிந்து வந்ததும் பட வேலைகளை ஆரம்பிக்கிறார்.


Click it and Unblock the Notifications











