ஆத்தாடீ.... பொங்கலுக்குள் 20 படங்கள் வருதாம்!

By Shankar

தீபாவளி ஒரு வழியாக முடிந்துவிட்டது. தீபாவளிப் படங்களின் ரிசல்ட்டும் தெரிந்து விடடது.

இப்போது பொங்கலுக்கு முன் மற்றும் பொங்கல் ரிலீஸ் பற்றிய செய்திகள் ஆரம்பித்துவிட்டன.

காரணம், தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஓபனிங் பொங்கல் விடுமுறையில்தான் கிடைக்கும்.

அதற்கு முன், பொங்கல் பண்டிகை வரை 50 நாட்கள் சுமார் 20 படங்கள் தொடர்ந்து ரிலீசாகப் போகின்றன. இதில் பெரிய மற்றும் சிறு பட்ஜெட் படங்கள் அடக்கம்.

கள்ளத் துப்பாக்கி

கள்ளத் துப்பாக்கி

தீபாவளிக்கே வருவதாக இருந்த கள்ளத்துப்பாக்கி கடைசி நேரத்தில் ஜகா வாங்கிவிட்டது. இந்தப் படம் வரும் 23-ம் தேதி பெரிய அளவில் வெளியாகிறது. ஆனால் துப்பாக்கியை மிஞ்சுமா என்ற சந்தேகம் இப்போது அவர்களுக்கும் வந்திருக்கும்!

சீனு ராமசாமி இயக்கிய 'நீர்ப்பறவை' படம் வருகிற 30-ந்தேதி ரிலீசாகிறது. இதில் விஷ்ணு, சுனைனா ஜோடியாக நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். இந்தப் படத்துக்கு தமிழக அரசு முதலில் வரி விலக்கு சலுகை மறுத்து, பின்னர் நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகு அனுமதித்துள்ளது.

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்

நல்ல பாராட்டுக்களைப் பெற்ற 'நடுவுல கெஞ்சம் பக்கத்தை காணோம்', வெங்கி இயக்கிய 'கொஞ்சம் காப்பி கொஞ்சம் காதல்' படங்களும் வருகின்றன.

கும்கி

கும்கி

அடுத்த மாதம் (டிசம்பர்) பிரபு சாலமன் இயக்கிய 'கும்கி' படம் ரிலீசாகிறது. இதில் பிரபு மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். நாயகியாக லட்சுமினமேனன் நடித்துள்ளார்.

நீதானே என் பொன்வசந்தம்

நீதானே என் பொன்வசந்தம்

முதலில் பிப்ரவர் 14-ம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டது நீதானே என் பொன் வசந்தம், இப்போது ரிலீஸ் தேதியை டிசம்பர் 14-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

பரதேசி

பரதேசி

பாலா இயக்கிய 'பரதேசி' படம் இன்னும் சத்தமின்றி கிடக்கிறது. அக்டோபரிலேயே லண்டனில் இசை வெளியீடு என முதலில் அறிவித்திருந்தனர். ஆனாலும் பொங்கலுக்கு முன் இந்தப் படம் வந்துவிடும் என்கிறார்கள்.

ஆதி பகவன்

ஆதி பகவன்

அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி - நீத்து சந்திரா நடித்துள்ள ஆதி பகவனும் இந்த 20 படங்களில் ஒன்றாக வரவிருக்கிறது. கடைசி நேரத்தில் இந்தப் படம் பொங்கல் போட்டியில் குதித்தாலும் ஆச்சர்யமில்லை.

விஸ்வரூபம்

விஸ்வரூபம்

கமல் இயக்கி நடித்துள்ள 'விஸ்வரூபம்' படமும் அடுத்த மாதம் ரிலீசாகிறது. இப்படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. இசை வெளியீடு நடக்கவிருந்து, க்ளைமேட் சரியில்லை என்ற காரணத்தால் தள்ளிப் போனது நினைவிருக்கலாம். அநேகமாக இந்த மாத இறுதியில் இசை வெளியீடும், அடுத்த மாதம் பட வெளியீடும் இருக்கும் என்கிறார்கள். ஆனால் எதுவும் உறுதியாக இல்லை.

சமர்

சமர்

திரு இயக்கத்தில் விஷால், திரிஷா ஜோடியாக நடித்த 'சமர்' படத்தையும் டிசம்பரில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

பொங்கல் ஸ்பெஷல்

பொங்கல் ஸ்பெஷல்

பொங்கல் பண்டிகைக்கான படங்களில் கார்த்தியின் 'அலெக்ஸ் பாண்டியன்', ஆர்யாவின் 'சேட்டை', விஷாலின் 'மதகஜராஜா' போன்ற படங்கள் ரிலீசாக உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X