இந்த மாசம் சிங்கம் 2, மரியான் உள்பட 20 படங்கள்!
சென்னை: இந்த ஜூலை மாதம் மட்டுமே 20-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன.
சூர்யா நடித்த சிங்கம் 2, தனுஷின் மரியான் போன்றவை அவற்றில் பெரிய பட்ஜெட் படங்கள். தமிழ் சினிமாவில் அரையாண்டு முடிந்துள்ள தருவாயில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிவிட்டன. மீதியுள்ள ஆறு மாதங்களில் மேலும் 120 படங்கள் வெளியாகும் சூழல் உள்ளது
இந்த ஜூலையில் மட்டுமே 20 படங்கள் வெளியீட்டுக்கு தயாராக நிற்கின்றன.

சிங்கம் 2
இந்த 20 படங்களில் டாப்பில் இருப்பது சூர்யா - அனுஷ்கா - ஹன்சிகா - விவேக் - சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சிங்கம் 2. ஹரி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்தப் படம் ஜூலை 5-ம் தேதி உலகெங்கும் ரிலீசாகிறது. அதே தேதியில் அன்பா அழகா, ஞாபகங்கள் தாலாட்டும் போன்ற படங்களும் வெளியாகின்றன.

தனுஷ் Vs விஷால்?
தனுஷ் நடிப்பில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள பரத்பாலாவின் மரியான் வரும் ஜூலை 19-ம் தேதி வெளியாகவிருக்கிறது. மரியானுடன் மோத விஷாலின் எம்ஜிஆரை தயார்ப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. விஷாலின் இன்னொரு படமான பட்டத்துயானையும் ஜூலையிலேயே வெளியாகும் என்கிறார்கள்.

சித்திரையில் நிலாச்சோறு
ஆர் சுந்தரராஜன் நீண்ட நாள் கழித்து இயக்கியுள்ள சித்திரையில் நிலாச்சோறு, பொன்மாலைப் பொழுது, வருசநாடு, விடியும் வரை பேசு, மச்சான், தங்க மீன்கள் போன்ற படங்களும் ஜூலை மாதம் வெளியாகத் தயாராக உள்ளன.

ரம்ஜான்...
வரும் ஆகஸ்ட் மாதம் ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது. எனவே அதற்கு முன் பெருமளவு படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் மும்முரமாக உள்ளனர். இந்த ஆண்டு ரம்ஜானுக்கும் நான்கைந்து படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications











