ஆகஸ்டில் ரிலீசுக்கு காத்திருக்கும் 20 படங்கள் - ஒரு பார்வை

By Shankar

ஏற்கெனவே தமிழ் சினிமா இந்த ஆண்டு 100 படங்களைத் தாண்டிவிட்டது, எண்ணிக்கையில்.

மிசச்சமிருக்கும் மாதங்களில் இன்னொரு செஞ்சுரியையும் தாண்டிவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த ஆகஸ்ட் மாதமும் கிட்டத்தட்ட 20 படங்கள் ரிலீசுக்குக் காத்திருக்கின்றன.

தலைவா

தலைவா

ஆகஸ்ட் 9-ம் தேதி விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா படம் வெளியாகிறது. ரம்ஜான் ஸ்பெஷலாக வரும் இந்தப் படம் பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது. வேந்தர் மூவீஸ் வெளியிடுகிறது.

ஆதலால் காதல் செய்வீர்

ஆதலால் காதல் செய்வீர்

சுசீந்திரன் இயக்கத்தில் ரெட்ஜெயன்ட் தயாரித்துள்ள படம் ஆதலால் காதல் செய்வீர். ஆகஸ்ட் 15 ஸ்பெஷலாக வெளியாகிறது.

தேசிங்கு ராஜா

தேசிங்கு ராஜா

தேசிங்கு ராஜா படத்தை எழில் இயக்கியுள்ளார். விமல், சூரி, பிந்து மாதவி நடித்துள்ள இந்தப் படமும் ஆகஸ்ட் ஸ்பெஷலாக வெளியாகிறது. இமான் இசையில் பாடல்கள் ஏற்கெனவே நல்ல ஹிட்.

555

555

பரத் நடிப்பில் சசி இயக்கத்தில் ரொம்ப நாட்களாக உருவாகிவரும் படம் ஐந்து ஐந்து ஐந்து (555). இப்போது படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்தாலும், தியேட்டர்கள் பற்றாக்குறை படத்தின் வெளியீட்டை தள்ளிப் போட்டுள்ளது.

தங்க மீன்கள்

தங்க மீன்கள்

படம் ரிலீஸ் என தேதி அறிவித்த பிறகும் இந்தப் படம் வெளிவருவது தாமதமாகிக் கொண்டே போகிறது. கற்றது தமிழ் வெளியாகி 5 ஆண்டுகளுக்குப் பிறகு ராம் இயக்கியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் நிச்சயமாக வெளியாகிவிடும் என்கிறார்கள்.

மேலும் 15 படங்கள்

மேலும் 15 படங்கள்

இந்தப் படங்களைத் தவிர, கலவரம், சுட்டகதை, நேற்று இன்று, கோப்பெருந்தேவி, மூடர்கூடம், மாதவனும் மலர்விழியும், விடியும் வரை பேசு, அடித்தளம், அச்சம் தவிர், நெடுஞ்சாலை, மத்தாப்பூ, மேகா உள்பட 15 படங்கள் வெளியாகவிருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X