மலையாள படத்தில் கேரள அமைச்சர்: ஒரே டேக்கில் அசத்தல்
திருவனந்தபுரம்: கேரள மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோஸ் தெட்டயில் மலையாலப் படம் ஒன்றில் கண்டக்டராக நடிக்கிறார்.
கான கொப்மத் என்னும் படத்தில் கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோஸ் தெட்டயில் கண்டக்டராக நடிக்கிறார். இந்தப் படம் தான் இவருக்கு முதல் படம். இதன் இயக்குநர் புதுமுகம் மஹாதேவன்.
இதில் சில காட்சிகளில் அமைச்சர் வருகிறார். இதற்கான படப்பிடிப்பில் அவர் உற்சாகமாக நடித்துள்ளார். நடிப்பு புதிது என்றாலும் காட்சிகளை ஒரே டேக்கில் ஓகே செய்து அனைவரையும் அசத்துகிறாராம்.
இது குறித்து அவர் கூறுகையில், "நான் கேமரா முன் நடிப்பது இது தான் முதல் தடவை. ஆனால் எனக்கு டென்ஷனாக இல்லை. அரசியலுக்கும், நடிப்புக்கும் திறமை தேவை," என்றார்.
More from Filmibeat
கேரள போக்குவரத்து துறை அமைச்சர் மலையாள படத்தில் கேரள போக்குவரத்து துறை அமைச்சர் மலையாள படம் kerala transport minister kerala transport minister makes debut in malayalam film malayalam movie


Click it and Unblock the Notifications











