லேப்டாப்பில் இருந்த புகைப்படங்களைக் காட்டி அனுஷ்காவை மிரட்டியவர் கைது!

கைது செய்யப்பட்ட நபர் மும்பையைச் சேர்ந்தவர். செப்டம்பர் 15ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக பண்டிட் ரவிசங்கர் டெல்லி போலீஸில் கொடுத்த புகாரில், எனது மகள் தனது லேப்டாப்பை பழுது பார்ப்பதற்காக டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் கொடுத்திருந்தார்.
அந்த லேப்டாப்பை பழுது பார்த்த நபர், அதில் இருந்த சில புகைப்படங்களை காப்பி செய்து எடுத்துக் கொண்டு அவற்றை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால், 1 லட்சம் டாலர் பணம் தர வேண்டும் என எனது மகளுக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுத்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதையடுத்து போலீஸார் நடவடிக்கையில் இறங்கி மும்பை நபரைக் கைது செய்தனர்.
அனுஷ்காவின் லேப்டாப்பில் என்ன மாதிரியான புகைப்படங்கள் இருந்தன என்ற விவரத்தை அனுஷ்காவும் சரி, போலீஸாரும் சரி தெரிவிக்கவில்லை.
Comments
anoushka shankar arrest அனுஷ்கா சங்கர் கைது சிதார் கலைஞர் புகைப்படம் மிரட்டல் ரவிசங்கர் photographs ravishankar sitarist threat


Click it and Unblock the Notifications