twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முருகதாஸ் அலுவலகத்தில் தஞ்சமடைந்திருந்த ஆசின் உதவியாளர் முத்துக்குமார்

    By Staff
    |

    Muthukumar
    சென்னை: கடத்தப்பட்டு விட்டதாக கூறப்பட்ட நடிகை ஆசினின் முன்னாள் டச் அப் பாய் நல்லமுத்துக்குமார், இயக்குநர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் சம்பத்குமார் ஆகியோரின் பாதுகாப்பில் இத்தனை நாட்களாக இருந்தது தெரிய வந்துள்ளது.

    ஆசினிடம் டச் அப் உதவியாளராக இருந்தவர் நல்லமுத்துக்குமார். இவர் ஆசின் மும்பைக்கு இடம் பெயர்ந்தவுடன் அவருடன் சென்று பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் முத்துக்குமாரின் தாயார் சென்னை புறநகர் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனது மகன் நல்லமுத்துக்குமார் குறித்த தகவல் இல்லை. அவரை ஆசின் குடும்பத்தினர் கடத்தி வைத்து சித்திரவதை செய்து வருவதாக அறிகிறேன் என்று கூறியிருந்தார்.

    இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். ஆனால் ஆசின் தரப்பில், எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் முத்துக்குமாரை வேலையை விட்டு நீக்கி நெடு நாட்களாகிறது என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து முத்துக்குமார் என்ன ஆனார் என்பது குழப்பமாக இருந்து வந்தது. இந்த நிலையில், முத்துக்குமாரிடமிருந்து அவரது தாயார் சுடலை வடிவுக்கு ஒரு போன் வந்துத. தான் பத்திரமாக இருப்பதாகவும், விரைவில் வீட்டுக்கு வருவதாகவும் கூறினார் முத்துக்குமார்.

    இதனால் போலீஸ் தரப்பிலும் நிம்மதியானது. ஆனால் முத்துக்குமார் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் முத்துக்குமார் சில நாட்களுக்கு முன்பு சென்னைப் பகுதியில் நடமாடுவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தனிப்படையினர் உஷார்படுத்தப்பட்டனர்.

    இந்த சூழ்நிலையில் சென்னை அருகே சோழவரம் பகுதியில் பதுங்கியிருந்த முத்துக்குமாரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

    அவரை திருவள்ளூர் எஸ்.பி. அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரது தாயார் சுடலை வடிவு வரவழைக்கப்பட்டு அவரிடம் முத்துக்குமார் ஒப்படைக்கப்பட்டார். இருவரும் கண்ணீர் விட்டபடி அணைத்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

    இதையடுத்து திருவள்ளூர் எஸ்.பி. சாரங்கன் செய்தியாளர்களிடம் முத்துக்குமார் விவகாரம் குறித்து விளக்கினார்.

    அடைக்கலம் தந்த முருகதாஸ்..

    எஸ்.பி. சாரங்கன் கூறுகையில், நல்லமுத்துக்குமாரை ஆசின் கடத்தி விட்டதாகவும், வேறு பல வதந்திகளும் பரவியது. நல்லமுத்துக்குமாரை கண்டுபிடிக்க பொன்னேரி துணை சூப்பிரண்டு ரங்கராஜன் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டன.

    இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கம், நசீர்பாட்ஷா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் திருப்பதி, மும்பை, டெல்லி, ஷீரடி உள்பட பல இடங்களில் நல்ல முத்துக்குமாரை தனித்தனியாக தேடினர்.

    இந்த நிலையில் நல்லமுத்துக்குமாரிடமிருந்து அவரது தாயாருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நல்லமுத்துக்குமார் விரைவில் நான் வீட்டுக்கு வருகிறேன் என்று கூறியதாக தெரிகிறது. அதனால் அவர் உயிருடன் இருக்கிறார் என்று போலீசிற்கு நிம்மதி ஏற்பட்டது.

    அதனைத் தொடர்ந்து சென்னை வந்த நல்லமுத்துக்குமார் நாளிதழ்களில் தன்னை பற்றி வெளியான செய்திகளை படித்து பார்த்து பயந்து போனார்.

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் சம்பத்குமார் ஆகியோரின் பாதுகாப்பில் தங்கி விட்டார். அவர் தனது ஏ.டி.எம். கார்டின் மூலம் பணம் எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசாரின் தேடுதல் தீவிரம் ஆனது. நேற்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஏ.டி.எம். கிளையில் பணம் எடுப்பதற்கு நல்லமுத்துக்குமார் சென்றார். அப்போது அவரை போலீசார் பிடித்து என்னிடம் அழைத்து வந்தனர்.

    அவர் பிடிப்பட்ட தகவல் புழலில் தங்கியிருந்த சுடலைவடிவிற்கு தெரிவிக்கப்பட்டு அவரும் என் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் முத்துக்குமாரை ஒப்படைத்தோம் என்றார் சாரங்கன்.

    காணாமல் போன நாள் முதல் என்ன செய்து வந்தார் என்பது குறித்து முத்துக்குமாரிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X