ஒச்சாயிக்கு வரிவிலக்கு தர மறுப்பதா... தயாரிப்பாளர் கடுப்பு

By Sudha

Daya and Thamarai
ஒச்சாயி தமிழ்ப் பெயர் இல்லை என்று கூறி வரிவிலக்கு தர மறுத்துவிட்டார்கள் அதிகாரிகள், என்று தயாரிப்பாளர் திரவிய பாண்டியன் கோபத்துடன் தெரிவித்தார்.

ஒச்சாயி படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. ஒச்சாயி பெயர் தமிழ் பெயர் இல்லை என்று வரிவிலக்கு அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

படத்தின் தயாரிப்பாளர் திரவியபாண்டியன் இதில் வில்லனாக நடித்துள்ளார். வரிவிலக்கு அளிக்காதது குறித்து அவர் கூறியதாவது:

ஒச்சாயி என்ற வார்த்தை தமிழ் அகராதியில் இல்லை என்கின்றனர். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து வரிவிலக்கு ஆணையருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பிய பிறகும் வரிவிலக்கு அளிக்க தயக்கம் காட்டுகின்றனர்.

ஒச்சாண்டம்மன் கோவில் காலம் காலமாக கருமாத்தூரிலே இருந்து வருகிறது. பாரதிராஜா, வைரமுத்து, வாகை சந்திரசேகர் போன்றோர் வணங்க கூடிய குலதெய்வம் கோவில் அது.

அந்த அம்மன் பெயரில்தான் இந்த படத்தை எடுத்துள்ளோம். அந்த பெயரை தமிழ் பெயரா என கேட்கும் அதிகாரிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களே என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது, என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X