twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோலிவுட்டில் பெண் இயக்குநர்களின் புரட்சி... இந்த ஆண்டு மட்டும் 20 பேர் இயக்குநராகிறார்கள்!

    By Shankar
    |

    பொதுவாக சினிமாவில் பெண்கள் என்றதுமே, ஹீரோயின் வேஷம், கவர்ச்சி ஆட்டம், காமெடி ஊறுகாய் போன்றவற்றுக்கு மட்டுமே என்றாகிவிட்டது.

    இவற்றை மீறி திரைக்குப் பின்னால் தொழில்நுட்பத்தில் பெண்கள் ஆர்வம் காட்டுவதும் குறைவு, பிரகாசிப்பது அதைவிட அரிது!

    அதையும் மீறி திரைக்குப் பின்னால் ஒளிப்பதிவாளர்களாக, மேக்கப் கலைஞர்களாக, உடையலங்கார நிபுணர்களாக, நடனக் கலைஞர்களாக சிலர் பிரகாசிக்கவே செய்கின்றனர்.

    முதல் பெண் இயக்குநர்

    முதல் பெண் இயக்குநர்

    முதன்முதலில் தமிழில் இயக்குநராக அறிமுகமான பெண் என்றால் அவர் டிபி ராஜலட்சுமிதான். இயக்கிய படம் மிஸ் கமலா. வெளிவந்த ஆண்டு 1936. இவர் இயக்கிய இரண்டாவது படம் மதுரை வீரன் (இதே படம்தான் பின்னர் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்து வெற்றி நடைபோட்டது!).

    அரிதாகவே வாய்ப்பு பெற்ற பெண்கள்

    அரிதாகவே வாய்ப்பு பெற்ற பெண்கள்

    இவருக்குப் பின்பு இயக்குநரான பெண் நடிகை விஜயநிர்மலா. இவர் இயக்கிய இன்னொரு படம் ராம் ராபர்ட் ரஹீம். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்தது. பானுமதியும், சாவித்திரியும் கூட ஓரிரு படங்கள் இயக்கினர். சுஹாஸினி ஒரு படம் இயக்கினார். பிஆர் பந்துலு மகள் பிஆர் விஜயலட்சுமியும் கூட ஒரு படம் பண்ணார்.

    ஆனால் இதெல்லாம் எப்போதோ ஒரு முறை நிகழும் அதிசயமாகத்தான் இருந்தன.

    2000 ஆண்டுக்குப் பிறகு..

    2000 ஆண்டுக்குப் பிறகு..

    தமிழில் பெண் இயக்குநர்கள் வருகை வேகமெடுத்தது என்றால் அது 2000 ஆண்டுக்குப் பிறகுதான். இதில் முக்கியமானவர் ரேவதி. ஆனால் அவர் எடுத்தது இந்தியில். அவர் வரிசையில் குறிப்பிடத்தக்கவர்கள் ப்ரியா வி (கண்ட நாள்முதல், கண்ணாமூச்சு ஏனடா), ஜேஎஸ் நந்தினி (திருதிரு துருதுரு). அவர்களுக்குப் பிறகு வெப்பம் படம் மூலம் அஞ்சனா, துரோகி படம் மூலம் சுதா என்று சிலர் வந்தனர்.

    ஐஸ்வர்யா ரஜினி

    ஐஸ்வர்யா ரஜினி

    ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் வந்த படம் 3. பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய கொலவெறிப் பாட்டு இடம்பெற்ற படம். எந்த புதிய பெண் இயக்குநருக்கும் கிடைக்காத பப்ளிசிட்டி இவருக்குத்தான் கிடைத்தது.

    சினேகா பிரிட்டோ

    சினேகா பிரிட்டோ

    மிக சமீபத்தில் வந்த பெண் இயக்குநர் என்றால் அவர் சினேகா பிரிட்டோ. எஸ்ஏ சந்திரசேகரனின் உறவுக்காரப் பெண். சட்டம் ஒரு இருட்டறை என்ற பழைய ஹிட் படத்தை அதே பெயரில் ரீமேக் செய்தார்.

    சௌந்தர்யா ரஜினி

    சௌந்தர்யா ரஜினி

    சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள். இயக்க ஆரம்பித்த முதல் படம் சுல்தான் வரவில்லை என்றாலும், இப்போது ரஜினியை வைத்து கோச்சடையானை இயக்கிக் கொண்டுள்ளார். இந்த ஆண்டின் மெகா பட்ஜெட், அதிக எதிர்ப்பார்ப்புக்குரிய படம் இதுதான்.

    'அன்னபெல்லா' அம்பிகா

    'அன்னபெல்லா' அம்பிகா

    இப்போது நிலைமை மாறிவிட்டது. கிட்டத்தட்ட 20 பெண் இயக்குநர்கள் தங்கள் முதல் படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். முக்கியமானவர் அம்பிகா. முன்னாள் கனவுக் கன்னியேதான். மலையாளத்தில் தனது முதல் படத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார். படத்தின் பெயர் அன்னபெல்லா.

    ஷோபனா

    ஷோபனா

    இவர் உருவாக்கிக் கொண்டிருப்பதும் மலையாளப் படம்தான். நாட்டிய நடன அடிப்படையிலான கதையை வைத்து தன் முதல் படத்தை இயக்குகிறார் ஷோபனா.

    பத்மப் பிரியா

    பத்மப் பிரியா

    ஒரு பக்கம் கதாநாயகியாக நடித்துக் கொண்டே, இயக்குநர் வேலையைச் செய்ய ஆரம்பித்திருப்பவர் பத்மப்பிரியா. சமீபத்தில் முதுகலைப் படிப்பு முடித்த இவர் இயக்குவதும் ஒரு மலையாளப் படத்தைதான்.

    ப்ருந்தா தாஸ் - ஹாய்டா

    ப்ருந்தா தாஸ் - ஹாய்டா

    தொலைக்காட்சிகளில் நீங்கள் அதிகம் பார்த்த முகம் இந்த ப்ருந்தா தாஸ். முதல் படத்துக்கு 'ஹாய்டா' எனப் பெயரிட்டு தமிழில் இயக்குகிறார். விரைவில் வெளிவரவிருக்கும் படம் இது.

    ரோகினி - அப்பாவின் மீசை

    ரோகினி - அப்பாவின் மீசை

    நல்ல நடிகை என்று பெயர் பெற்ற ரோகிணி, தனது பன்முகத் திறமையை காட்ட இயக்கத்தைத் தேர்வு செய்துள்ளார். தனது முதல் படத்துக்கு அப்பாவின் மீசை எனத் தலைப்பிட்டுள்ளார்.

    கிருத்திகா உதயநிதி

    கிருத்திகா உதயநிதி

    உதயநிதி ஸ்டாலின் மனைவியான கிருத்திகா சிவாவை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இன்னும் தலைப்பிடப்படவில்லை.

    ரூபா - சந்திரா

    ரூபா - சந்திரா

    ஸ்ரேயா நடிப்பில் உருவாகி வரும் சரித்திரப் படமான சந்திராவை இயக்குபவரும் பெண்தான். ரூபா அய்யர். கன்னட நடிகை. இந்தப் படம் தமிழ் - கன்னடத்தில் உருவாகி வருகிறது.

    சோனா - தேவ்

    சோனா - தேவ்

    இப்போதைய கவர்ச்சி நடிகை சோனாவும் இயக்குநராக மாறியுள்ளார். கனிமொழி என்ற படத்தைத் தயாரித்த இவர், இப்போது தேவ் என்ற பெயரில் தமிழில் படம் எடுக்கிறார்.

    ஊர்வசி

    ஊர்வசி

    தமிழ், மலையாளத்தில் மிக முக்கிய நடிகையாகப் பார்க்கப்படும் ஊர்வசிக்கும் படம் இயக்கும் ஆசை எட்டிப் பார்த்துவிட்டது. ஸ்க்ரிப்டோடு தயாராகிக் கொண்டிருக்கிறார்.

    ஷகிலா - நீலகுறிஞ்சி பூத்து

    ஷகிலா - நீலகுறிஞ்சி பூத்து

    எல்லா ரசிகர்களுக்கும் சர்ப்ரைசாக அமைந்துள்ளது கவர்ச்சி நடிகையாக இருந்து காமெடிக்குத் தாவிய ஷகிலா படம் இயக்கப் போவதாக அறிவித்ததுதான். இந்தப் படத்தை மலையாளத்தில் தயாரித்து இயக்குகிறார். அதில் நடிக்கவும் போகிறாராம். ஆனால் நோ கவர்ச்சி. இது குடும்பப் படமாம்!

    இன்னும் வருகிறார்கள்...

    இன்னும் வருகிறார்கள்...

    இவர்கள் தவிர இன்னும் ஒரு டஜன் பெண் இயக்குநர்கள் தங்கள் முதல் பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர்கள், சந்திரா (பருத்தி வீரன், ரெட்டை சுழி), இயக்குநர் கே நட்ராஜின் மகள் ரஜினி (நீர்ப்பறவை உதவி இயக்குநர்) போன்றவர்களைச் சொல்லலாம்.

    செல்வராகவன், கவுதம் மேனன் போன்றவர்களிடமும் சில பெண்கள் உதவி இயக்குநர்களாக உள்ளனர். இவர்கள் எப்போது வேண்டுமானாலும் இயக்குநர் தொப்பியை அணியத் தயாராக உள்ளவர்களே!

    English summary
    Nowadays there are more than 20 female directors waiting for their debut in Tamil cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X