ஈழப் படுகொலை பேனர் - மன்சூர் அலிகான் மீது வழக்கு

லட்சிய திமுக சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் திருச்சியில் போட்டியிடுகிறார். தனது பிரசார வேனில், ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய பேனர்களை அவர் கட்டியுள்ளார்.
இது தேர்தல் நடத்தை விதிகளுக்குப் புறம்பானது. எனவே அகற்ற வேண்டும் என அவருக்கு போலீஸார் அறிவுறுத்தினர். இருப்பினும் அவர் கண்டுகொள்ளவில்லை. மேலும் அந்த பேனர்களில் தனது படத்தையும் அவர் இடம் பெற வைத்தார்.
இதையடுத்து மன்சூர் அலிகான் நடத்தை விதிகளை மீறியதாக கூறி போலீஸார் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
More from Filmibeat
ஈழப்படுகொலைகள் தமிழ்நாடு திருச்சி தேர்தல் 2009 பேனர் மன்சூர் அலிகான் லட்சிய திமுக வழக்கு banner electiobn 2009 genocide ldmk mansoor ali khan tamilnadu


Click it and Unblock the Notifications











