திருமணத்துக்குப் பிறகு மும்பைவாசம்... ஜூஹுவில் வீடு வாங்கிய பிரகாஷ் ராஜ்!

By Chakra

Prakash Raj with Pony Verma
திருமணத்துக்குப் பிறகு அடிக்கடி மும்பையில் தங்க வேண்டியிருக்கும் என்பதால் மும்பையின் ஜூஹு பகுதியில் புதிதாக வீடு வாங்கியுள்ளார்கள் பிரகாஷ் ராஜும் அவரது வருங்கால மனைவி போனி வர்மாவும்.

முதல் மனைவி லலிதகுமாரியை விவாகரத்து செய்துவிட்ட பிரகாஷ் ராஜுக்கும் பாலிவுட் நடன இயக்குநர் போனி வர்மாவுக்கும் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி மும்பையில் திருமணம் நடக்கிறது.

திருமணத்துக்காக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மும்முரமாக அழைப்பிதழ் வைத்து வருகிறார் பிரகாஷ் ராஜ்.

இதற்கிடையே திருமணத்துக்குப் பிறகு இருவரும் மும்பையில் தங்குவதென தீர்மானித்துள்ளனர். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் மனைவியுடன் மும்பையிலேயே இருக்க வேண்டியிருப்பதால், 2000 சதுர அடியில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார் பிரகாஷ் ராஜ். மும்பையின் பிரபலமான ஜூஹு பகுதியில் இந்த வீட்டை அவர் வாங்கியுள்ளார். பிரகாஷ் ராஜுக்கு சென்னையில் பெரிய பங்களா உள்ளது.

திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்காக சிம்லா, குலுமனாலி செல்ல இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X