twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா லாக்டவுனால் நஷ்டம்.. 20% சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள ஹீரோக்கள் சம்மதம்!

    By
    |

    ஐதராபாத்: தங்கள் சம்பளத்தில் 20 சதவிகிதத்தைக் குறைத்துக் கொள்ள, தெலுங்கு ஹீரோக்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    கொரோனா காரணமாக சினிமா துறை கடந்த சில மாதங்களாக முடங்கி கிடக்கிறது.

    தயாரான சினிமா படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    பிக் பாஸ் போட்டியாளர் சுட்டிக் குழந்தை கேப்ரில்லா இப்படி கவர்ச்சி புயலா என்ட்ரி கொடுத்துருக்காரே!பிக் பாஸ் போட்டியாளர் சுட்டிக் குழந்தை கேப்ரில்லா இப்படி கவர்ச்சி புயலா என்ட்ரி கொடுத்துருக்காரே!

    நடிகர், நடிகைகள்

    நடிகர், நடிகைகள்

    கடன் வாங்கி படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தியேட்டர்கள் திறக்கப்படாததால் ஒடிடி தளத்தில் சிலர், படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர். இதன் காரணமாக நடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    மோகன்லால்

    மோகன்லால்

    அதை நடிகர் சங்கம் ஏற்றுக் கொண்டு சம்பளத்தை குறைக்க முடிவு செய்தது. நடிகர் மோகன் லால் தற்போது நடிக்கும் த்ரிஷ்யம் 2 படத்துக்கு தனது சம்பளத்தை பாதியாகக் குறைத்துள்ளார். இந்நிலையில் லாக்டவுன் தளர்வுகளுக்குப் பிறகு சினிமா படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    சம்பளக் குறைப்பு

    சம்பளக் குறைப்பு

    இதனால் சில படங்களின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன. பெரிய ஹீரோ படங்களின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தைச் சரி செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அதன்படி, நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைப்பது பற்றிப் பேசப்பட்டது.

    ஹீரோக்கள் சம்மதம்

    ஹீரோக்கள் சம்மதம்

    தெலுங்கு ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தில் 20 சதவிகிதம் குறைத்துக் கொள்ளச் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பளக் குறைப்பு தினமும் ரூ.20,000-க்கு கீழே சம்பளம் வாங்கும் நடிகர்களுக்குப் பொருந்தாது. அதே போல், தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களுடைய சம்பளத்தை 20 சதவிகிதம் குறைக்க சம்மதித்துள்ளனர்.

    English summary
    Active Telugu Film Producers Guild announced that Telugu actors and technicians will take a 20 percent pay cut in their remunerations compared to their pre-lockdown remunerations.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X