twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரூபினாவை ரூ.1.8 கோடிக்கு விற்க முயலும் தந்தை!

    By Staff
    |

    Slumdog kid Rubina
    இந்தியாவின் வறுமையைப் பற்றிப் பேசி ஆஸ்கர் விருதுகளைக் குவித்த ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தின் சிறுவர் சிறுமியர் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

    இந்தப் படத்தில் நடித்த சிறுமி ரூபினா அலியை அவரது தந்தையே ரூ.1.8 கோடிக்கு விற்க முயல்வதாக திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து மும்பை போலீசார் ரூபினா மற்றும் அவர் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பியதும், பதறியடித்துக் கொண்டு மறுப்பு தெரிவித்துள்ளார் ரூபினாவின் தந்தை.

    ஸ்லம்டாக் மில்லியனேரில் நடித்ததற்காக ரூபினா அலிக்கு ரூ.1.5 லட்சம் தரப்பட்டது. ஆஸ்கர் அறிவிக்கப்பட்டதும் மராட்டிய அரசு வீடு தருவதாகச் சொன்னது. கேரள நிறுவனம் ஒன்று ப்ளாட் தந்தது. இவ்வளவு பரிசுகளைக் குவித்தாலும் ஸ்லம்டாக் சிறுவர்களின் வாழ்க்கை தாராவியைத் தாண்டவில்லை.

    இந்த நிலையில்தான் தங்கள் வறுமையைப் போக்க, ரூபினாவை விற்க அவரது பெற்றோரே முடிவு செய்துள்ள விவரம் தெரியவந்தது. யாராவது வசதியான அரபு ஷேக் கேட்டால் பெண்ணை நல்ல விலைக்குத் தள்ளிவிட அவர்கள் முயன்றுள்ளனர்.

    இதைக் கேள்விப்பட்ட இங்கிலாந்து பத்திரிகை ஒன்றின் சில நிருபர்கள் ஷேக் வேடத்தில் போய் ரூபினா அலியின் தந்தையைத் தொடர்பு கொண்டு பேரம் பேசியுள்ளனர். மும்பை நட்சத்திர ஓட்டலில் வைத்து ரூபினா அலியின் தந்தை ரபீக், சித்தப்பா முகைதீன், மாமா ராஜனுடன் நடத்தப்பட்ட இந்த பேச்சுக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    முதலில் ரூ.37 லட்சம் பேசியவர்கள், பின்னர் விலையை கிடுகிடுவென உயர்த்தி ரூ.1.5 கோடியில் நின்றிருக்கிறார்கள். 'ரூபினா ஒரு ஆஸ்கர் குழந்தை. அவளுக்கு இதைவிட அதிகமாகத் தரலாம் நீங்கள்' என்று 'சரக்கின்' மதிப்பு பற்றி பெருமையாக வேறு கூறினார்களாம் ரூபினாவின் பெற்றோர்.

    எதற்காக இப்படி விற்கிறீர்கள் என்று கேட்டதற்கு, "படத்தில் காட்டப்பட்ட வறிய நிலையில்தான் நாங்கள் இன்னும் இருக்கிறோம். அரசுகள் அறிவித்த எந்த சலுகையும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. வெறும் ரூ.150 கூலியில், எழு பேர் கொண்ட எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை. ரூபினாவின் எதிர்காலம் கருதியே இந்த முடிவை எடுத்தோம்" என்று ரூபினாவின் தந்தை ரபீக் தெரிவித்திருந்தார்.

    அதிர்ச்சி-மறுப்பு

    இவை அனைத்தையும் அந்தப் பத்திரிகை படங்களுடன் வெளியிட்டிருந்தது. அல் ஜஸீரா டிவியும் இதனை பெரிய செய்தியாக வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து நேற்று வரை மறுப்பு தெரிவிக்காமலிருந்தார் ரபீக். என் மகளின் நலனுக்காகத்தான் இதைச் செய்தோம் என்றே அவர் கூறியிருந்தார்.

    இதனால் மும்பை போலீஸார் ரூபினா மற்றும் அவரது தந்தைக்கு விசாரணை நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

    அடுத்த நிமிடமே எல்லாம் தலைகீழாகிவிட்டது. "என் மீது அவதூறு பரப்புவதற்காக தீட்டப்பட்ட சதி இது. என்னிடம் ஒரு ஷேக்கின் மனைவி தத்துக் கேட்டது உண்மைதான், ஆனால் அதற்கு தான் மறுத்துவிட்டேன். அந்த சந்திப்பு உண்மைதான். ஆனால் என் மகளை பேரம் பேசவில்லை. அந்த வீடியோவில் இருப்பது என் குரல் அல்ல..." என்றெல்லாம் கூறியுள்ளார்.

    இதை வைத்து இன்னொரு ஸ்லம்டாக் எடுக்கலாம் போலிருக்கே!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X