பைக்குகளுக்கு தீ-ஸ்டண்ட் நடிகர் கைது!
மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்ததாக ஸ்டண்ட் நடிகர் கைது செய்யப்பட்டார்.
வடசென்னை முத்தியால்பேட்டை, ஏழுகிணறு ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களில் மோட்டார் சைக்கிள்கள் மர்மமான முறையில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
நேற்றிரவு போலீசார் ரோந்து சென்றபோது, ஒரு ஆசாமி மோட்டார் சைக்கிள் ஒன்றிலிருந்து பெட்ரோல் திருடுவதைப் பார்த்து மடக்கினர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் பெயர் கணேசன் (35) என்றும், சாலிகிராமத்தில் வசிப்பவர் என்றும் தெரியவந்தது.
பூந்தோட்ட காவல்காரன், கேப்டன் பிரபாகரன் உள்பட பல்வேறு படங்களில் ஸ்டண்ட் நடிகராக நடித்திருக்கிறார்.
பெட்ரோலை திருடி முகர்ந்து பார்க்கும் போது தனக்கு ஒருவிதமான போதை ஏற்படுவதாகவும், அத்துடன் பெட்ரோலை தீ வைக்கும் போது அதில் வரும் புகையும் தனக்கு போதையை ஏற்படுத்த்துவதாகவும், இதனால்தான் பைக்குகளை எரித்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


Click it and Unblock the Notifications











