வடிவேலு, சிங்கமுத்து: 'வில்லன்களான காமெடியன்கள்'

By Sudha

வடிவேலு மேனேஜர் தொடர்ந்த கொலை மிரட்டல் வழக்கில் நடிகர் சிங்கமுத்துவுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி தேவதாஸ், இதுவரை சினிமாவில் காமெடி செய்து வந்த வடிவேலுவும், சிங்கமுத்துவும் இந்த வழக்கால் வில்லன்களாகியுள்ளனர் என்று கருத்து தெரிவித்தார்.

நடிகர் வடிவேலுவின் மேனேஜர் சில தினங்களுக்கு முன் சிங்க முத்து மீது கொலை மிரட்டல் வழக்கு தொடர்ந்தார். தயாரிப்பாளர் கண்ணனுடன் சேர்ந்து கொண்டு வடிவேலு மற்றும் அவரது அலுவலக ஊழியர்களை கொன்றுவிடுவதாக மிரட்டினார் சிங்கமுத்து என்று வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகர் சிங்கமுத்து மற்றும் தயாரிப்பாளர் கண்ணன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று முதன்மை செசன்ஸ் நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிங்கமுத்து மற்றும் கண்ணனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

2 வார காலத்திற்கு விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

உத்தரவை வழங்கியபோது நீதிபதி தேவதாஸ் கருத்து தெரிவிக்கையில், நடிகர் வடிவேலுவும் சிங்க முத்துவும் பல படங்களில் ஜோடியாக காமெடி வேடங்களில் நடித்துள்ளனர். இந்த இரட்டை காமெடியர்கள் சொத்துப் பிரச்சினைக்காக வில்லன்களாக மாறி உள்ளனர் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X