எல்லோர் வாழ்விலும் வந்துப்போன.. நொந்துப் போன காதல் வடு ‘அழகி‘… பார்த்திபன் ட்வீட் !

சென்னை : இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டில் வெளி வந்த திரைப்படம் அழகி.

இந்த படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, மோனிகா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

அழகி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது.

அழகி

அழகி

2002ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானத் திரைப்படம் அழகி. இப்படத்தில் கிராமத்தின் பள்ளிக்கூட வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திய திரைப்படம் அழகி. காதல், நட்பு, பிரிவு, பொறாமை, சந்தேகம், பரிதவிப்பு, பாசம், மனிதாபிமானம், குழந்தைத்தனம், விட்டுக்கொடுத்தல் போன்ற அனைத்து குணாதிசியங்களையும் ஒருங்கே இப்படத்தில் காட்டி இருப்பார் தங்கர்பச்சான்.

அழகி 20 ஆண்டு

அழகி 20 ஆண்டு

நந்திதா தாஸ் தனலட்சுமியாகவும், பார்த்திபன் சண்முகமாகவும் நடித்தார்கள் என்பதை விட வாழ்ந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். காதலித்தவர்களையும், காதலிக்கப்பட்டவர்களையும், நட்பை உயிராய் நினைத்தவர்களையும் இப்படம் வெகுவாக பாதித்தது.

ஊரான் காதலை ஊட்டி வளத்தா

ஊரான் காதலை ஊட்டி வளத்தா

இப்படம் வெளியாகி 20 வருடங்கள் ஆனதையொட்டி, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பார்த்திபன் அழகி திரைப்படத்தை நினைவு கூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அழகிக்கு வயது 20! ஊரான் காதலை ஊட்டி வளத்தா, தன் காதலி தானா வளருவான்னு இன்றளவும் இதயத்தை (20)வருட இன்னொரு காரணம் இசை alias இளையராஜா. நந்திதாதாஸும் நந்தியாக தேவையானியும் தேவையா நீ என்றளவில் நானும் (கையாலாகா காதலன்-காதலை தவிர காதலியை காப்பாற்ற ஏதுமற்றவன்) வாழ்ந்திருப்போம்

இதயத்தை வருடிய அழகி.

இதயத்தை வருடிய அழகி.

திக்குமுக்காட வைத்தது. காதல் காட்சிகளே இல்லாத ஒரு காதல் படம்-காலத்திற்கும் கொண்டாட காரணம், ஒப்பனையில்லா நிஜதன்மை நிறைந்த காதல். எல்லோர் வாழ்விலும் வந்துப் போன (அ) நொந்துப் போன காதல் வடு 'அழகி'! தேவதாஸ் பார்வதிக்கு பின் சண்முகம் தனலட்சுமி என்றளவில் இன்றளவும் இதயத்தை (20)வருட

அழகி 2 விரைவில்

அழகி 2 விரைவில்

சண்முகத்தின் part 1, part 2 ஆகி இறுதிவரை இணைப்பற்று போனதால்,Part 2 எடுத்தாவது அத்துப்போன காதலை அர்த்தப்படுத்த முயற்சிக்கிறார் திரு தங்கர். ஒரு காவிய தயாரிப்பாளர் சிக்கினால் விரைவில் அழகி 2 ! என பார்த்திபன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X