twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் தனி ஆள் இல்லை.. 20 ஆண்டுகளைக் கடந்த சிட்டிசன்.. செம படம்.. சுவாரஸ்யம்!

    |

    சென்னை : அஜித்தின் திரையுலக பயணத்தில் முக்கிய மைல்கல் படம் என்றால் அது சிட்டிசன் படம் தான். ஆக்ஷன், த்ரில்லர் படமாக எடுக்கப்பட்ட இப்படத்தை சரவண சுப்பைய்யா இயக்கி இருந்தார். இந்த படம் ரிலீசாகி 20 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் சிட்டிசன் படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கே பார்ப்போம்.

    ரப்பர் மாதிரி உடம்பை வளைத்து உடற்பயிற்சி செய்யும் நடிகை அதுல்யா! ரப்பர் மாதிரி உடம்பை வளைத்து உடற்பயிற்சி செய்யும் நடிகை அதுல்யா!

    அஜித் பல கெட் அப்களில் நடித்த சிட்டிசன் படம் 2001 ம் ஆண்டு ரிலீசானது. இந்த படத்தில் மீனா, வசுந்தரா தாஸ், நக்மா, நிழல்கள் ரவி, பாண்டியன், தேவன், அஜய் ரத்னம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வித்தியாசமான கதை என்பதால் பலரின் மனம் கவர்ந்த படமாக அமைந்தது சிட்டிசன்.

    முதல் முறையாக பல கெட்அப்

    முதல் முறையாக பல கெட்அப்

    வாலி, அசல், பில்லா, வில்லன் போன்ற படங்களில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். ஆனால் சிட்டிசன் படத்தில் தனது சினிமா பயணத்திலேயே முதல் முறையாக அதிக கெட்அப்களில் தோன்றி இருப்பார். இதற்காக தனது உடல் எடையை கூட்டியும், குறைத்தும் இருந்தார் அஜித். இந்த படத்திலும் தந்தை - மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருப்பார் அஜித்.

    சமீராவுக்கு பதில் வசுந்தரா

    சமீராவுக்கு பதில் வசுந்தரா

    இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் சமீரா ரெட்டியிடம் தான் பேசப்பட்டுள்ளது. ஆனால் வேறு சில படங்களில் ஒப்பந்தமாகி இருந்ததால் இந்த படத்தில் நடிக்க சமீரா மறுத்து விட்டார். இதனால் 2000 ம் ஆண்டு ஹேராம் படத்தில் நடித்த வசுந்தரா தாஸ் இப்படத்தில் நடிக்க வைக்கப்பட்டார். அத்துடன் இந்த படத்தில் பூக்காரா, ஐ லைக் யூ ஆகிய 2 பாடல்களையும் வசுந்தரா பாடி இருந்தார். இந்த இரு பாடல்களும் ஹிட்டாகின.

    முதல் படத்திலேயே கலக்கிய சரவணன்

    முதல் படத்திலேயே கலக்கிய சரவணன்

    சிட்டிசன் படத்தை இயக்கிய சரவணன் சுப்பைய்யாவிற்கு இது முதல் படம். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்திலும் அவர் நடித்திருந்தார். சிட்டிசன் படத்தின் வெற்றிக்கு பிறகு சுப்பைய்யாவுடன் இணைந்து மற்றொரு படம் பண்ண நினைத்தார் அஜித். இதிகாசம் என பெயரிடப்பட்ட இப்படம் சாதி பிரச்சனைகளை பேசுவதாக கதை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த படம் பிறகு கைவிடப்பட்டது. இதனால் ஏபிசிடி, மீண்டும் ஆகிய படங்களை சுப்பைய்யா இயக்கினார். நடிகராக ராவணன், விசாரணை, காஷ்மோரா, வேலைக்காரன், கோலி சோடா 2 உள்ளிட்ட படங்களில் சிறிய ரோல்களில் சுப்பைய்யா நடித்துள்ளார்.

    பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான அத்திப்பட்டி

    பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான அத்திப்பட்டி

    சிட்டிசன் படத்தில் தமிழக வரைபடத்தில் இருந்தே தொலைந்து போனதாக கற்பனை கிராமமாக சித்தரிக்கப்பட்ட அத்திப்பட்டி கிராமம் காட்சிகள், சென்னையின் புறநகர் பகுதியில் படமாக்கப்பட்டது. சிட்டிசன் படத்திற்கு பிறகு அத்திப்பட்டி என்ற பெயர் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது. இந்த கிராம சூழலை படமாக்குவதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற படக்குழு, பிறகு படகில் சென்று அந்த இடத்தை கண்டறிந்து, படமாக்கி உள்ளனர். அஜித் ரசிகர்கள் அதிகமானவர்கள் இருப்பது போன்ற காட்சி ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். பாடலில் வரும் இந்த பகுதி ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டது.

    வைரமுத்து வரிகளுக்கு தேவா இசை

    வைரமுத்து வரிகளுக்கு தேவா இசை

    இந்த படத்திற்கு தேவா இசை அமைத்திருந்தார். மேற்கே விதைத்த, பூக்காரா, சிக்கிமுக்கி கல்லு, ஐ லைக் யூ உள்ளிட்ட 6 பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும். இதில் ஐ லைக் யூ பாடல், 1998 ல் ஜெர்மன் பாடகர் சாஷா பாடிய ஐ ஃபீல் லோன்லி பாடலை போன்றே அமைக்கப்பட்டிருக்கும். பூக்காரா பாடலை வசுந்தர தாசும், ஷங்கர் மகாதேவனும் இணைந்து பாடியிருப்பார்கள். இந்த பாடல் புகழ்பெற்ற ஏபிபிஏ நம்பரில் இடம்பெற்ற டேக் ஏ சான்ஸ் ஆன் மீ பாடலை தழுவியதாக இருக்கும்.

    English summary
    Here are a few interesting facts about the film Ajith's Citizen
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X