200 கோடி மோசடி வழக்கில் கைதாவாரா ஜாக்குலின்? சார்ஜ் சீட்டில் அவரது பெயரையும் சேர்த்த அமலாக்கத்துறை!

மும்பை: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் படு நெருக்கமாக தொடர்பில் இருந்த நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸும் குற்றவாளி என சார்ஜ் சீட்டில் அமலாக்கத்துறையினர் பதிவு செய்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

Recommended Video

Vikrant Rona Movie Review | Yessa ? Bussa ?| Vikrant Rona | Kiccha Sudeep |Review

இலங்கையில் இருந்து மும்பை வந்து பிரபல பாலிவுட் ஹீரோயினாக மாறியவர் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்.

சமீபத்தில் கன்னட திரைப்படமான விக்ராந்த் ரோணா படத்தில் நாயகியாக நடித்து இருந்தார்.

218 கோடி மோசடி

218 கோடி மோசடி

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் 218 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸிடம் பலமுறை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தனர். இதன் காரணமாக ஏகப்பட்ட சிக்கலில் சிக்கினார் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ். வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற அவரை மும்பையில் போலீசார் மடக்கி பிடித்து பாஸ்போர்ட்டையும் ரத்து செய்தனர்.

பல கோடி மதிப்புள்ள பரிசுகள்

பல கோடி மதிப்புள்ள பரிசுகள்

சுமார் 10 கோடி மதிப்பிலான காதல் பரிசுகளை சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு வழங்கியது தெரிய வந்த நிலையில், தான் இந்த வழக்கில் வசமாக சிக்கினார் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ். மேலும், பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை மாற்றுவதற்கு இவர் உதவி செய்துள்ளதாக அமலாக்கத்துறையினர் தொடர்ந்து இவரை விசாரித்து வந்தனர்.

ஜாக்குலினும் குற்றவாளி

ஜாக்குலினும் குற்றவாளி

218 கோடி ரூபாய் மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை தொடர்ந்து ஜாக்குலினும் குற்றவாளி என தற்போது அவர் மீது அமலாக்கத் துறையினர் அதிரடியாக சார்ஜ் சீட் ஃபைல் செய்திருப்பது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. ஜாக்குலினிடம் இருந்து சுமார் 7.27 கோடி மதிப்பிலான நகைகள், விலையுயர்ந்த குதிரைகள் மற்றும் பூனைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கைதாவாரா பாலிவுட் நடிகை

கைதாவாரா பாலிவுட் நடிகை

சார்ஜ் சீட்டில் இவரும் குற்றவாளி என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் அதிரடியாக நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் கைது செய்யப்படுவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், தனக்கும் இந்த வழக்குக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்றும் தேவையில்லாமல் தன்னை கோர்த்து விட்டுள்ளனர் நடிகை ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.

ராம் சேது

ராம் சேது

கிச்சா சுதீப்பின் விக்ராந்த் ரோணா படத்தில் நடித்திருந்த ஜாக்குலின் அடுத்ததாக ரன்வீர் சிங்கின் சர்கஸ் மற்றும் அக்‌ஷய் குமாரின் ராம் சேது உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சுகேஷ் சந்திரசேகருடன் நெருக்கமாக இவர் இருக்கும் புகைப்படங்கள் வெளியானதில் இருந்து தான் இந்த பிரச்சனையில் அவர் சிக்கிக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X