»   »  2014... தமிழ் திரை வானிலிருந்து உதிர்ந்த நட்சத்திரங்கள்!

2014... தமிழ் திரை வானிலிருந்து உதிர்ந்த நட்சத்திரங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

2014-ம் ஆண்டில் பாலு மகேந்திரா, நாகேஸ்வரராவ், ராம நாராயணன், எஸ்எஸ் ஆர் என முக்கியமான ஆளுமைகளை இழந்தது தமிழ் சினிமா.

அந்த விவரங்களைப் பார்க்கலாம்:

லட்சுமி காந்தம்

லட்சுமி காந்தம்

93 வயதான லட்சுமி காந்தம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும், கைதி கண்ணாயிரம், வேலைக்காரி போன்ற படங்களில் நடித்தவர். கடந்த ஜனவரி 5-ம் தேதி மறைந்தார்.

திருவாரூர் தங்கராசு

திருவாரூர் தங்கராசு

ரத்தக் கண்ணீர் படத்தின் வசனகர்த்தா, திராவிட இயக்கத்தின் முக்கிய எழுத்தாளரான திருவாரூர் தங்கராசு, கடந்த ஜனவரி 6-ம் தேதி மரணமடைந்தார். அவருக்கு வயது 83.

அஞ்சலி தேவி

அஞ்சலி தேவி

மன்னாதி மன்னன், அஞ்சல் பெட்டி 501, உரிமைக் குரல், அன்னை ஓர் ஆலயம் போன்ற படங்களில் நடித்த அஞ்சலி தேவி தனது 86 வயதில், கடந்த ஜனவரி 13-ம் தேதி மரணத்தைத் தழுவினார்.

அக்கினேனி நாகேஸ்வரராவ்

அக்கினேனி நாகேஸ்வரராவ்

தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்தவர், தயாரிப்பாளர், இயக்குநர் அக்கினேனி நாகேஸ்வரராவ். மிகப் பெரிய சாதனையாளரான அவரை புற்று நோய் கடந்த ஜனவரி 22-ம் தேதி பலி கொண்டது. அவருக்கு வயது 91.

பாலு மகேந்திரா

பாலு மகேந்திரா

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த படைப்பாளியான பாலு மகேந்திரா தனது 74 வது வயதில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி மரணமடைந்தார். திரையுலகம் சந்தித்த மிகப்பெரிய இழப்பு அது. தலைமுறைகள் என்ற படத்தை கடைசியாகத் தந்தார். தலைமுறைகள் தாண்டியும் வாழ்கிறார்.

ராம நாராயணன்

ராம நாராயணன்

இந்தியாவின் முன்னணி மொழிகளில் 100 படங்களுக்கும் மேல் இயக்கிய முதல் சாதனையாளர் ராம நாராயணன் கடந்த ஜூன் 22-ல் மரணமடைந்தார். இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகம் கொண்ட இந்த சாதனையாளர் தனது 65 வயதில் மரணத்தைத் தழுவியது திரையுலகின் இன்னொரு முக்கிய இழப்பு.

காதல் தண்டபாணி

காதல் தண்டபாணி

60 வயதுக்குப் பின்னர்தான் காதல் படம் மூலம் ஒரு நடிகராக அறிமுகம் ஆனார் தண்டபாணி. பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தபோதே கடந்த ஜூலை 20-ம் தேதி மரணமடைந்தார்.

அசோக்குமார்

அசோக்குமார்

ஜானி, முந்தானை முடிச்சு போன்ற பல வெள்ளிவிழா படங்களின் ஒளிப்பதிவாளர், இயக்குநர் அசோக்குமார் தனது 71வது வயதில் கடுமையான உடல்நலக்குறைவில் இறந்தார். அவர் இறந்த நாள் அக்டோபர் 22.

எஸ்எஸ் ராஜேந்திரன்

எஸ்எஸ் ராஜேந்திரன்

எஸ்எஸ் ஆர் என அழைக்கப்பட்ட எஸ்எஸ் ராஜேந்திரன் தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழ்ந்தவர். திராவிட இயக்க நடிகர்களில் முக்கியமானவர். கடந்த அக்டோபர் 23-ம் தேதி தனது 86 வயதில் இயற்கை எய்தினார்.

ருத்ரைய்யா

ருத்ரைய்யா

இரண்டே படங்கள் இயக்கியிருந்தாலும், தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராகப் பார்க்கப்பட்ட ருத்ரய்யா கடந்த நவம்பர் 18-ம் தேதி இறந்தார். அவள் அப்படித்தான் படத்தை ஒரு பாடமாக தமிழ் சினிமாவுக்கு விட்டுச் சென்றார்.

இவர்களைத் தவிர, ஜனவரி 5-ம் தேதி உதய் கிரண் (வயது 33), மார்ச் 7-ல் லொள்ளு சபா பாலாஜி (43), ஏப்ரல் 18-ம் தேதி இயக்குநர் குரு தனபால் (55), ஏப்ரல் 20ல் ஒளிப்பதிவாளர் கே பிரசாத் (56), மே 13-ல் பாடகி ஜெயலட்சுமி (83), ஜூன் 12-ம் தேதி கொடுக்காபுளி செல்வராஜ், ஜூன் 14-ம் தேதி தெலுங்கானா சகுந்தலா (63), ஜூன் 25 ல் ஏசி முரளி மோகன் (54), ஜூலை 16-ம் தேதி இயக்குநர் கவி காளிதாஸ், ஆகஸ்ட் 7-ம் தேதி சுருளி மனோகர், ஆகஸ்ட் 6-ம் தேதி இயக்குநர் பாபு, செப்டம்பர் 4-ம் தேதி கே மோகன், நவம்பர் 5-ம் தேதி நடிகர் மகாதேவன், நவம்பர் 8-ம் தேதி மீசை முருகேஷ், டிசம்பர் 12-ம் தேதி ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணன், டிசம்பர் 15-ம் தேதி சக்ரி ஆகியோரும் திரையுலகை விட்டு மறைந்தனர்.

English summary
Here is the list of film personalities passed away in the year 2014.
Please Wait while comments are loading...