twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2015ல் அதிக வசூல் செய்த பாலிவுட் படங்கள் – 'க்யா கமால் ஹை' பார்வை!

    By Manjula
    |

    மும்பை: இந்த 2015 ம் ஆண்டு பாலிவுட் படங்களுக்கு நல்ல மங்களகரமான ஆண்டாக அமைந்திருக்கிறது, ஆமாம் இந்த வருடம் வெளிவந்த பல படங்கள் வசூலில் பல சாதனைகளைச் செய்திருக்கின்றன.

    பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான ஷாரூக்கான், சல்மான்கான், அமீர்கான் போன்றோரின் படங்கள் எதுவும் இந்தப் பட்டியலில் இல்லை, ஆச்சரியமாக மூன்று ஹீரோயின்களின் படங்கள் வசூலில் சாதனை படைத்திருக்கின்றன.

    இந்த 2015 ம் ஆண்டின் வசூல் தேவதையாக மாறியிருக்கிறார் கங்கனா ரனாவத், அதே நேரம் 100 கோடிப் படங்களின் நாயகி என்ற பட்டியலில் இருந்து சற்று கீழே இறங்கி இருக்கிறார் தீபிகா படுகோனே.

    இந்த ஆண்டின் முதல் பாதியில் வசூலில் முதல் 5 இடங்களைப் பிடித்த படங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

    தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்

    தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்

    கங்கனா ரனாவத்- மாதவன் நடிப்பில் வெளிவந்த தனு வெட்ஸ் மனு திரைப்படம், வெளியான நாள் முதலே வசூலில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கிறது. பாலிவுட்டில் அதிகபட்ச பெருமை 100 கோடிப் பட்டியல் தான், இந்தப் படம் அதற்கும் மேலே சென்று இதுவரை 150 கோடியை வசூலித்து இருக்கிறது. வெளியான 42 நாட்களுக்குள்ளேயே இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறது படம். 2 வித்தியாசமான வேடங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்து விட்டார் படத்தின் நாயகி கங்கனா ரனாவத். படத்தின் பெரும்பகுதியை தனது தோள்களில் தூக்கிச் சுமந்ததற்கு கைமேல் பலன் கிடைத்து விட்டது கங்கனாவிற்கு.

    ஏபிசிடி2

    ஏபிசிடி2

    பிரபுதேவா, வருண் தவான் இவர்களுடன் இணைந்து ஸ்ரத்தா கபூர் நடித்திருக்கும் படம் ஏபிசிடி2. நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டம் வெல்ல வேண்டும் என்று ஆசைப்படும் நாயகியும் நாயகனும் அதற்காக மேற்கொள்ளும் போராட்டங்களே படத்தின் கதை. படத்தில் கதை என்று பெரிதாக எதுவும் இல்லையென்றாலும் வருண் ஷ்ரத்தா இடையிலான காதல், துள்ளலான நடன அசைவுகள் இவற்றுடன் இளமையும் சேர்ந்து கொண்டதில் இளசுகளைக் கவர்ந்து இழுத்து விட்டது படம். வெளியாகி 17 நாட்களுக்குள் 100 கோடிப் பட்டியலில் மின்னல் வேகத்தில் சென்று சேர்ந்து உள்ளது ஏபிசிடி 2.

    அக்சய்குமாருக்கு கிடைத்த 2 லட்டுகள்

    அக்சய்குமாருக்கு கிடைத்த 2 லட்டுகள்

    கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று அக்சய்குமாரைப் பார்த்துக் கேட்டால் கண்டிப்பாக ஆமாம் என்று தான் கூறுவார் அக்சய். இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களில் 3, 4 வது இடங்களைப் பிடித்து இருக்கிறது அக்சயின் பேபி மற்றும் கப்பர் இஸ் பேக் 2 படங்களும். பேபி திரைப்படம் தீவிரவாதிகளை அழிப்பதை மையமாகக் கொண்டது, கப்பர் இஸ் பேக் திரைப்படம் லஞ்சத்தை ஒழிப்பதைப் பற்றியது.

    இரண்டுமே கமர்சியல் படமாக இல்லாமல் இருந்தாலும் கூட மக்களின், பேராதரவைப் பெற்று வசூலில் சாதனை படைத்தது.பேபி திரைப்படம் 95.5 கோடியை வசூல் செய்தது, 100 கோடியில் இணைய வேண்டியதை வெறும் 4 கோடியில் தவற விட்டது பேபி படம். கப்பர் இஸ் பேக் திரைப்படம் 87.54 கோடியை வசூலித்தது.(தமிழில் வெளியான ரமணா படத்தின் ரீமேக் தான் கப்பர் இஸ் பேக் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது)

    100 கோடியில் இருந்து இறங்கிய தீபிகா

    100 கோடியில் இருந்து இறங்கிய தீபிகா

    பாலிவுட்டில் தொடர்ந்து 100 கோடி படங்களைக் கொடுத்த பெருமைக்கு உரிய தீபிகா இந்த முறை அதிலிருந்து இறங்கியிருக்கிறார், பிக்கு திரைப்படம் 79.73 கோடியை வசூலித்ததில் 100 கோடிப் பட்டியலில் இந்த முறை இடம்பிடிக்கவில்லை தீபிகா. பாலிவுட்டில் தீபிகாவுக்கு கடும்சவாலைக் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார் கங்கனா, இருவருக்கும் இடையிலான போட்டியில் தற்போது கங்கனாவின் கையே மேலோங்கி நிற்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் அடுத்த அரையாண்டில் இருவரில்,யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்று.

    English summary
    2015: First Half 70 Bollywood films were released and out of that only a few managed to make it big at the box office. The Top 5 Bollywood Movies Tanu Weds Manu Returns, ABCD 2 , Baby, Piku And Gabbar Is Back.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X