2015ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருது.. சிறந்த நடிகை ஜோதிகா, சிறந்த நடிகர் மாதவன்!
சென்னை: தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். அந்தவகை யில் 2015-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இறுதிச்சுற்று, தனிஒருவன், 36 வயதினிலே ஆகிய படங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வாரிக்குவித்துள்ளன.
சிறப்பு பரிசு: மேலும் சிறந்த படத்துக்கான சிறப்பு பரிசு இறுதிச்சுற்று படத்துக்கும் பெண்களை உயர்வாக சித்தரித்ததற்கான சிறப்பு பரிசு 36 வயதினிலே படத்துக்கும் வழங்கப்படுகின்றன. சிறந்த நடிகர்கள் இறுதிச்சுற்று படத்துக்காக நடிகர் மாதவன் சிறந்த நடிகராகவும், 36 வயதினிலே படத்துக்காக நடிகை ஜோதிகா சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசு, வை ராஜா வை படத்துக்காக கௌதம் கார்த்திக்கிற்கும், சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசு இறுதிச்சுற்று படத்துக்காக ரித்திகா சிங்கிற்கும் வழங்கப்பட இருக்கின்றன.

சிறந்த வில்லன் நடிகர்: தனி ஒருவன் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய அரவிந்த்சாமிக்கு சிறந்த வில்லன் நடிகருக்கான விருதும் அஞ்சுக்கு ஒண்ணு படத்துக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது சிங்கம் புலிக்கும் மேலும் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது அபூர்வர் மகான் படத்துக்காக தலைவாசல் விஜய்க்கும், சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது பாபநாசம் படத்துக்காக நடிகை கௌதமிக்கும் வழங்கப்பட இருக்கிறது.
பிருந்தா மாஸ்டர்: சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனி ஒருவன் படத்துக்காக சிறந்த கதாசிரியராக மோகன் ராஜாவும் சிறந்த ஒளிப்பதிவாளராக ராம்ஜியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் சிறந்த படத்தொகுப்பாளராக தனி ஒருவன் படத்துக்கு கோபி கிருஷ்ணாவும் சிறந்த கலை இயக்குனராக பசங்க 2 படத்துக்காக பிரபாகரனும், சிறந்த நடன ஆசிரியராக தனி ஒருவன் படத்திற்காக பிருந்தாவும் தேர்வாகி உள்ளனர்.சிறந்த பாடகர் கானா பாலா: உத்தமவில்லன், பாபநாசம் படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளராக ஜிப்ரான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், வை ராஜா வை படத்துக்காக சிறந்த பின்னணி பாடகராக கானா பாலாவும், 36 வயதினிலே படத்துக்காக சிறந்த பாடகியாக கல்பனா ராகவேந்தரும் தேர்வாகி உள்ளனர். மேலும் தேர்வுர் செய்யப்பட்ட திரைப்பட கலைஞர்களுக்கு வரும் 6ந் தேதி மாலை 6 மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கில் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.
சிறப்புரை: இவ்விழாவில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு பே சாமிநாதன் விழாவிற்கு தலைமை ஏற்று விருந்தினர்களுக்கு தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு காசு, ஊக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பேருரையாற்றுவார். மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலை துறை அமைச்சர் கே பி சேகர் பாபு ஆகியோர், சிறப்புரை ஆற்றுவார்கள்.


Click it and Unblock the Notifications











