2018ம் ஆண்டு சினிமா ரசிகர்களுக்கு ரொம்ப ஸ்பெஷல்: ஏன் என்றால்...
Recommended Video

சென்னை: 2018ம் ஆண்டில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், ரஜினியின் 2.0, கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2 உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.
2017ம் ஆண்டு நிறைவடைய சில நாட்களே உள்ளன. 2017ம் ஆண்டில் வெளியான படங்களில் நடிகர், நடிகைகள் அல்ல நல்ல கதை இருந்தாலே போதும் ஹிட்டாகிவிடுவோம் என்று ரசிகர்கள் நிரூபித்துள்ளனர்.
இந்த டிரெண்ட் இயக்குனர்களுக்கு புது தெம்பு அளித்துள்ளது.

ரஜினி
2018ம் ஆண்டு ஸ்பெஷல் என்றே கூற வேண்டும். ஏனென்றால் அடுத்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0, உலக நாயகன் கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2 ஆகிய படங்கள் ரிலீஸாகின்றது. கமல், ரஜினி படங்கள் வந்தால் அது ஸ்பெஷல் தானே.

சூர்யா
சிங்கம் 3 படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. சூர்யாவை பெரிய திரையில் காணும் ஆவலுடன் அவரது ரசிகர்கள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெயம் ரவி
இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகியுள்ள டிக் டிக் டிக் படம் வரும் 2018ம் ஆண்டில் ரிலீஸாக உள்ளது. ஜெயம் ரவி நடித்துள்ள இந்த படத்தை பார்க்க டோலிவுட், பாலிவுட் எல்லாம் காத்திருக்கிறது.

விஜய்
அஜீத் மீண்டும் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்க உள்ளார். விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிவிருக்கிறார். இந்த இரண்டு படங்களுக்கும் தற்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

த்ருவ்
விக்ரமின் மகன் த்ருவ் கோலிவுட்டில் ஹீரோவாகியுள்ளார். அவர் பாலா இயக்கத்தில் நடிக்கும் அர்ஜுன் ரெட்டி ரீமேக் 2018ம் ஆண்டில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











