2019ல் டும்டும்டும் கொட்டிய சினிமா ஸ்டார்கள்.. ஆர்யாதான் டாப்
சென்னை: இந்திய சினிமாவில் 2019 ஆம் ஆண்டு பலருக்கும் திருமணம் நடந்தது. பலரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். திரையுலகில் உள்ளவர்கள் அதே துறையில் உள்ளவர்களையே அதிகம் திருமணம் செய்து கொள்வர்.இந்த ஆண்டு பல பிரபலங்களுக்கு திருமணம் அரங்கேறியது.
இதில் முக்கியமானது ஆர்யா திருமணம்தான். ரொம்ப நாட்களாக இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த கல்யாணம் அது. அவரது நட்பு நடிகர்களுக்கு கல்யாணமாகி விட்ட நிலையில் ஆர்யாவுக்கும் இந்த ஆண்டு சுபமாக முடிந்தது.
இந்த நட்சத்திர திருமணங்கள் குறித்து ஒரு பார்வை பார்ப்போம்.

ஆர்யா திருமணம்
ஆர்யா தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திரம் மற்றும் நடனத்தில் ராணியாக திகழும் சாய்ஷா. இவர்கள் இருவரின் திருமணம் மார்ச் மாதம் பத்தாம் தேதி அன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. கஜினிகாந்த் பட சமயத்தில் இருவருக்கும் காதல் வந்து இரு குடும்பத்தினர் அனுமதி உடன் திருமணம் செய்து கொண்டனர். திருமண விழாவில் இவர்களை திரையுலகினர் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

என்.எஸ்.கே.ரம்யா திருமணம்
என்.எஸ் கலைவாணர் பேத்தி ரம்யா தனது அற்புதமான குரல் உடன் பல பாடல்களை பாடியுள்ளார் மற்றும் நம்மை அவரின் காந்த குரலில் மயங்கி உள்ளார். இவர் தனது காதலர் சத்யா உடன் செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இதில் அவருக்கு நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.

அனிதா சம்பத் திருமணம்
தனது தமிழ் உச்சரிப்பால் அனைவரையும் கவர்ந்த செய்தி வாசிப்பாளர் அனிதா அவரின் காதலர் பிரபாகரன் என்பவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து பின் திருமணம் செய்து கொண்டனர். இவரின் திருமண வரவேற்பு நிகழ்வில் பல பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

ஆலியா மானசா திருமணம்
சின்னத்திரை சீரியல் ஒன்றில் இருவரும் இணைந்து நடித்து வந்தனர். அப்பொழுது இருந்தே இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவியது. அதனை உறுதி செய்யும் வகையில் கடந்த மே மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர். சின்னத்திரை சீரியல் போல நிஜத்திலும் இவர்கள் இருவரும் ராஜா ராணி தான்.


Click it and Unblock the Notifications











