2019ம் ஆண்டில் இளைஞர்களை கவர்ந்த டாப் 10 அறிமுக நாயகிகள் பட்டியல் இதோ!

சென்னை: 2020ம் ஆண்டை நெருங்க இன்னும் ஒரு வார காலமே இருக்கிறது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பல புதுமுக நடிகைகள் அறிமுகமாகி இளைஞர்களின் மனங்களை கொள்ளையடித்துள்ளனர்.

பிற மொழி சினிமாவில் கலக்கிய பிரபல நடிகைகளும் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து தங்களின் கெத்தை காட்டியுள்ளனர்.

2019ம் ஆண்டில் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த டாப் 10 புதுமுக நடிகைகள் யார் யார் என்பதை இங்கே காண்போம்.

10. திகங்கனா சூர்யவன்ஷி

10. திகங்கனா சூர்யவன்ஷி

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான தனுசு ராசி நேயர்களே படத்தில் நாயகியாக அறிமுகமானவர் திகங்கனா சூர்யவன்ஷி. டோலிவுட்டில் வெளியான ஹிப்பி மற்றும் பாலிவுட்டில் வெளியான ஜலேபி ஆகிய படங்களில் நடித்த திகங்கனா தனுசு ராசி நேயர்களே படத்தில் கவர்ச்சியை தாராளமாகக் காட்டி தமிழ் ரசிகர்களை வளைத்துப் போட்டுள்ளார்.

9. அபர்ணா பாலமுரளி

9. அபர்ணா பாலமுரளி

ராஜீவ் மேனன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்கிய சர்வம் தாள மயம் படத்தில் அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி. அறிமுக படம் என்றாலும், அபர்ணா பாலமுரளிக்கு படத்தில் அதிக அளவிலான காட்சிகள் கொடுக்கப்படவில்லை. அடுத்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள சூரரை போற்று படத்தில் இவர் தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

8. அனகா

8. அனகா

ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான நட்பே துணை படத்தில் ஹாக்கி விளையாடும் வீராங்கனையாக நடிகை அனகா அறிமுகமானார். தனது அழகான நடிப்பால் பல தமிழ் ரசிகர்களின் மொபைல் டிபியாக இந்த ஆண்டு அனகா மாறியுள்ளார்.

7. மிருணாளினி ரவி

7. மிருணாளினி ரவி

சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏலியனாக வந்து ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்தவர் டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி ரவி. உலகளவில் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு பல விருதுகள் கிடைத்திருந்தாலும், தமிழ்நாட்டில் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால், மிருணாளினி ரவிக்கு இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை.

6. லிஜிமோல் ஜோஸ்

6. லிஜிமோல் ஜோஸ்

பிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து இயக்குநர் சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்த லிஜிமோல் ஜோஸ் அக்காவாகவும், மனைவியாகவும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். இப்போதெல்லாம் திருமணத்திற்கு பெண் தேடுபவர்கள் இவர் போல பெண் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்து வருகின்றனராம்.

5. கல்யாணி பிரியதர்ஷன்

5. கல்யாணி பிரியதர்ஷன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள ஹீரோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியுள்ளார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இயக்குநர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி பிரியதர்ஷன், ஹீரோவில் குறைந்த காட்சிகளில் வந்தாலும், தனது நடிப்புத் திறமையால் பட்டையை கிளப்பியுள்ளார்.

4. மாளவிகா மோகனன்

4. மாளவிகா மோகனன்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தெலுங்கு, மலையாளம், இந்தி என கலக்கி வரும் இவர் அடுத்ததாக தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

3. மேகா ஆகாஷ்

3. மேகா ஆகாஷ்

எனை நோக்கிப் பாயும் தோட்டா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்திருந்தால், இந்நேரம் இந்த பட்டியலில் மேகா ஆகாஷ் இடம் பிடித்திருக்க மாட்டார். தனுஷ் படத்திற்கு முன்பாக சிம்பு நடிப்பில் இந்த ஆண்டு வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் அறிமுகமானார். அடுத்து அதர்வாவின் பூமராங் படத்திலும் நடித்துள்ளார் மேகா ஆகாஷ்.

2. மஞ்சு வாரியர்

2. மஞ்சு வாரியர்

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான மஞ்சு வாரியர் இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார். கோபம், வீரம், சோகம் என பல உணர்வுகளை வெற்றிமாறனின் அசுரன் படத்தில் அசால்ட்டாக நடித்து தனது கெத்தை தமிழிலும் நிரூபித்துள்ளார்.

1. சம்யுக்தா ஹெக்டே

1. சம்யுக்தா ஹெக்டே

கோமாளி படத்தில் இளம் வயது ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து இந்த ஆண்டு பல இளைஞர்களின் இன்க் பாட்டில் மனங்களை உடைத்த இன்க் பெண் சம்யுக்தா ஹெக்டே தான் இந்த ஆண்டு சிறந்த அறிமுக நடிகை பட்டியலில் முதலிடம் பெறுகிறார். கோமாளி வெற்றியைத் தொடர்ந்து வேல்ஸ் நிறுவனம் தயாரித்த பப்பி படத்திலும் நாயகியாக சம்யுக்தா நடித்துள்ளார். அடுத்த ஆண்டும் இவருக்கு சிறப்பான ஆண்டாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஸ்பெஷல் மென்ஷன்

ஸ்பெஷல் மென்ஷன்

பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து அணியில் சிங்கப்பெண்களாக நடித்த பல பெண்கள் அடுத்தடுத்து நாயகிகளாக அறிமுகமாகி வருகின்றனர். ஆனால், இவர்களில் பலர் ஏற்கனவே அறிமுகம் ஆனதால் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. தென்றலாக நடித்த அம்ரிதா அய்யர், ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லாம்மா போன்ற பலருக்கும் தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X