சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளிய சோனாக்‌ஷி.. இந்த ஆண்டு ட்விட்டரை கலக்கிய டாப் 10 பெண்கள் இவங்கதான்!

சென்னை: இந்த ஆண்டு ட்விட்டரை கலக்கிய டாப் 10 பெண்கள் பட்டியலை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.

இதில், கிளாமர் குயின் சன்னி லியோனுக்கு 8வது இடம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டு சிங்கப்பெண் அர்ச்சனா கல்பாத்தி இந்த பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளார்.

முதலிடத்தில் பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவும், இரண்டாவது இடத்தில் அனுஷ்கா ஷர்மாவும் இடம்பிடித்துள்ளனர்.

சோனாக்‌ஷி சின்ஹா

பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தான் இந்த ஆண்டு டாப் என்டர்டெயின்மென்ட் ட்விட்டர் ஹேண்டில் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். மிஷன் மங்கள், லால் காப்டன், கலான்க் என இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்துள்ளன. சல்மான் கான் நடிப்பில் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ள தபங் 3 படத்திலும் சோனாக்‌ஷி தான் ஜோடி.

அனுஷ்கா ஷர்மா

அனுஷ்கா ஷர்மா

பாலிவுட் நடிகையும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். ஃபேஷன், கிரிக்கெட், சினிமா என பலவிதமாக தனது ட்விட்டர் ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறார் அனுஷ்கா ஷர்மா.

லதா மங்கேஷ்கர்

லதா மங்கேஷ்கர்

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், இந்த பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார். அண்மையில் அவர் உடல் நலம் குன்றியிருந்த நிலையில், அவர் குறித்த பல வதந்திகள் இணையத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.

அர்ச்சனா கல்பாத்தி

அர்ச்சனா கல்பாத்தி

விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் புரொடியூசரான அர்ச்சனா கல்பாத்தி, பிகில் அப்டேட்களை தளபதி ரசிகர்களுக்கு தொடர்ச்சியாக கொடுத்து வந்தே இந்த 4ம் இடத்தை பிடித்துள்ளார். இந்தியளவில் பிகில் திரைப்படம் ட்விட்டரிலும் பல சாதனைகளை இந்த ஆண்டு புரிந்துள்ளது.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸுடன் திருமணம் செய்த பிரியங்கா சோப்ரா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான தி ஸ்கை இஸ் பிங்க் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டு கூகுள் தேடலில் முதலிடத்தை பிடித்த பிரியங்கா சோப்ரா இந்த பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ளார்.

ஆலியா பட்

ஆலியா பட்

பாலிவுட்டின் இளம் முன்னணி ஆலியா பட் இந்த பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளார். ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வரும் ஆலியா பட், இந்த ஆண்டு ராஸி மற்றும் கல்லி பாய் என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கோமாளி திரைப்படம் 100 நாட்களை கடந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது, பொம்மை குதிரை சவாரி உள்ளிட்ட பல ட்வீட்டுகளை தொடர்ந்து பதிவேற்றி 7வது இடத்தை பிடித்துள்ளார் காஜல் அகர்வால்.

சன்னி லியோன்

சன்னி லியோன்

யாஹுவில் முதலிடம் பிடித்த சன்னி லியோன் கூகுள் தேடல் மற்றும் ட்விட்டர் டாப் பட்டியலில் சரசரவென சறுக்கி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார். கிளாமரை குறைத்து விளையாட்டு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தியதன் காரணமாக சன்னி லியோனுக்கு பழைய மவுசு குறைந்துள்ளது.

மாதுரி தீக்‌ஷித்

மாதுரி தீக்‌ஷித்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு பாலிவுட்டில் கலான்க் மற்றும் டோட்டல் தமால் என இரு படங்களில் கலக்கிய மாதுரி தீக்‌ஷித் ட்விட்டரிலும் ரசிகர்களை கவர்ந்து இந்த பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்

ரகுல் ப்ரீத் சிங்

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் இந்த ஆண்டு நடித்து அசத்தி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங், ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ள 2019ம் ஆண்டின் டாப் என்டர்டெயின்மென்ட் ஹேண்டில்ஸ் பட்டியலில் 10வது இடத்தை ரகுல் பிடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X