2020ம் ஆண்டின் முதல் ட்விட்டர் சண்டை.. வைரலாகும் #மண்டியிட்ட_வலிமை ஹாஷ்டேக்!
சென்னை: 2020 புத்தாண்டை முன்னிட்டு கடந்த டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு மாஸ்டர் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், மாஸ்டர் ஹாஷ்டேக்கை தளபதி ரசிகர்கள் உலகளவில் டிரெண்ட் செய்தனர்.
அதற்கு போட்டியாக அஜித் ரசிகர்கள் வலிமை ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.
ஆனால், அஜித் ரசிகர்கள் உருவாக்கிய ஹாஷ்டேக் பெரியளவில் வைரலாகவில்லை.
வலிமை பட டைட்டில் அறிவிப்பு ஹாஷ்டேக் 3 மில்லியன் ட்வீட்களை பெற்ற நிலையில், மாஸ்டர் ஹாஷ்டேக் 3.5 மில்லியன் ட்வீட்கள் பெற்று முன்னிலை பெற்றுள்ளது.
இதனால், மாஸ்டர் ஹாஷ்டேக் முன்பு வலிமை ஹாஷ்டேக் மண்டியிட்டது என்ற ரீதியில் 2020ம் ஆண்டின் முதல் ரசிகர்கள் சண்டை ட்விட்டரில் தற்போது வெடித்து வருகிறது.
ஒன்ஸ் எ கிங்.. ஆல்வேஸ் எ கிங்
மாஸ்டர் ஹாஷ்டேக் 3.5 மில்லியன் ட்வீட்கள் பெற்று வலிமை ஹாஷ்டேக்கை பீட் செய்துள்ள நிலையில், #மண்டியிட்ட_வலிமை என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர்.
இந்தியளவில் டிரெண்டிங்
#மண்டியிட்ட_வலிமை என்ற ஹாஷ்டேக்கையும் இந்தியளவில் டிரெண்ட் செய்து விஜய் ரசிகர்கள் கெத்து காட்டி வருகின்றனர்.
என்ன காரணம்
மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் ஹாஷ்டேக் 3.5 மில்லியன் ட்வீட்களை தாண்டவில்லை. அதுவெறும் ஃபேக் ரெக்கார்டு என தல ரசிகர்கள் கிளப்பிய ஹாஷ்டேக்குக்கு பதிலடி கொடுக்கும் விதமாகத் தான் தற்போது இந்த ட்விட்டர் சண்டை கிளம்பியுள்ளது.
கொலவெறி
மெர்சல் படத்தின் வெற்றிமாறன் போட்டோவை போட்டு கொலவெறியில் விஜய் ரசிகர்கள் இருக்கின்றனர் என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.
மாஸ் காட்டும் மாஸ்டர்
மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், ஹேட்டர்கள் அதை கண்டு அஞ்சுவதாக கத்தி படத்தில் விஜய் பைப்பில் இருந்து வெளியே வரும் வீடியோ க்ளிப்பை எடிட் செய்து ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
செஞ்சிட்டீங்களா
செஞ்சிட்டீங்களா வலிமையை மொத்தமா செஞ்சிட்டீங்களா என்ற ரீதியில் மீம் போட்டு கலாய்த்துள்ளார் இவர்.
போர் அடிக்குது
எப்படி ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்வது என்று தெரியாமல் சும்மா போர் அடிக்குதுன்னு.. தமன்னா, காஜல் அகர்வால் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு இந்த ரசிகரும் அந்த ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











