twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2020ல் ரசிகர்களை ஏமாற்றிய 5 திரைப்படங்கள் !

    |

    சென்னை: கடந்த வருடங்களை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது 2020 குறைந்த அளவிலான திரைப்படங்கள் மட்டுமே திரையில் வெளியாகி இருந்தது.

    இவ்வாறு வெளியான திரைப்படங்களில் ஒரு சில திரைப்படங்கள் எதிர்பாராமல் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரி குவித்த நிலையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல திரைப்படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

    தமிழில் 2020 ஆம் ஆண்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தோல்வியடைந்த டாப் 5 திரைப்படங்களை பற்றி இங்கு நாம் காண்போம்.

    எதிர்பார்த்த வெற்றி இல்லை

    எதிர்பார்த்த வெற்றி இல்லை

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படங்கள் என்றாலே தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலக அளவில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் 2. O, பேட்ட என தொடர் வெற்றி படங்களை கொடுத்த ரஜினிகாந்த் முதல்முறையாக ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைந்த தர்பார் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து இருக்க பாக்க ஆக்சன் திரைப்படமாகயிருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் எக்கச்சக்கமான லாஜிக் ஓட்டைகள் படம் முழுக்க இருந்ததால் தோல்வியைத் தழுவியது.

    சிரிப்பே வராத நான் சிரித்தால்

    சிரிப்பே வராத நான் சிரித்தால்

    இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி இப்பொழுது பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் சில திரைப்படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். மீசைய முறுக்கு, நட்பே துணை என நடித்த முதல் இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற, மூன்றாவதாக இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றிய அறிமுக இயக்குனர் ராணா இயக்கிய நான் சிரித்தால் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் முழுக்க முழுக்க காமெடி கலந்த திரைப்படமாக உருவான நான் சிரித்தால் படத்தில் வரும் பெரும்பான்மையான காமெடி காட்சிகளில் சிரிப்பே வரவில்லை என சொல்லப்பட்ட நிலையில் இந்த படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. மேலும் இந்த திரைப்படம் கெக்க பெக்க என்ற குறும் படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    வசூல் ரீதியாக தோல்வி

    வசூல் ரீதியாக தோல்வி

    தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் ஜீவா, வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து இன்று வரை சிறந்த நடிகராக இருந்து வருகிறார். ஆனால் சமீபகாலமாக இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வர சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை இயக்கும் இயக்குனர் ராஜுமுருகனுடன் முதல் முறையாக இணைந்த ஜிப்ஸி திரைப்படம் வித்தியாசமான கதையில் உருவாகி இருந்தாலும் பெரும்பான்மையான கதை வட இந்தியாவில் நடப்பது போல இருப்பதால் ரசிகர்களுடன் சரியாக கனெக்ட் ஆகாமல் இந்த திரைப்படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனால் விமர்சன ரீதியாக நல்ல பெயரைப் பெற்றது.

    சுமாரான வெற்றி

    சுமாரான வெற்றி

    அர்ஜுன் ரெட்டி திரைப்படத்திற்குப் பிறகு விஜய் தேவரகொண்டாவின் மார்க்கெட் இப்பொழுது எங்கேயோ போயிருக்கும் நிலையில் தமிழில் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர் குறிப்பாக பெண் ரசிகைகள் நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில் அர்ஜுன் ரெட்டி போலவே உருவாகியிருந்த வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் திரைப்படத்தில் மூன்று நாயகிகள் மூன்று வெவ்வேறு வயது காலகட்டத்தில் நடக்கின்றவாறு உருவாகியிருந்த இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

    ஏமாற்றம்

    ஏமாற்றம்

    நடிப்பிற்காக தன்னைத் தானே செதுக்கிக்கொண்டு இப்பொழுது ஹாலிவுட் வரை சென்றுள்ள நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் பார்த்த அனைவரையும் பிரம்மிக்க வைத்த நிலையில் அதன் பின் வெளியான பட்டாஸ் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி திரைப்படங்கள் தொடர்ந்து இயக்குனர் துரை செந்தில்குமார் பட்டாஸ் திரைப்படத்தையும் இயக்கி இருக்க தமிழர்களின் அடிமுறை தற்காப்பு கலையை அற்புதமாக காட்டியிருந்த பட்டாஸ் திரைப்படத்தில் தனுஷ் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மேலும் புதுப்பேட்டை திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சினேகா தனுஷுடன் இணையும் படம் என்பதால் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இதில் எதிர்பார்த்ததைவிட மசாலா காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருப்பதால் வழக்கமான கமர்சியல் திரைப்படத்தை போல பட்டாஸ் திரைப்படமும் இருந்ததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்ததோடு தனுஷின் முந்தைய திரைப்படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது வசூலில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே பட்டாஸ் இருந்தது.

    English summary
    2020 five flop movies tamil
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X