2020 ஆரம்பமே அமர்களம் தான்.. ரஜினியின் தர்பாருடன் பொங்கலுக்கு இத்தனை படங்கள் போட்டி!

சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட மற்றும் தல அஜித்தின் விஸ்வாசம் படங்களால் களைகட்டியது.

வரும் 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகையும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் பொங்கலாக மாறவுள்ளது.

மேலும், நடிகர் தனுஷின் பட்டாஸ், பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல், சசிகுமாரின் எம்.ஜி.ஆர். மகன், சிவாவின் சுமோ மற்றும் சில படங்களும் பொங்கல் ரிலீசாக களமிறங்க திட்டமிட்டுள்ளன.

தர்பார் பொங்கல்

தர்பார் பொங்கல்

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம் வெளியாகிறது. தளபதி விஜய்க்கு சர்கார் அமைத்து கொடுத்த முருகதாஸ் ரஜினிக்கு ஒரு தர்பாரை இந்த பொங்கலுக்கு அமைத்துக் கொடுக்கவுள்ளார்.

பொன் மாணிக்கவேல்

பொன் மாணிக்கவேல்

ஜபாக் மூவிஸ் தயாரிப்பில் ஏ.சி. முகில் இயக்கத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே வெளியாகி இருக்க வேண்டிய பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரஜினியின் தர்பார் படத்துடன் போட்டியாக வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள பிரபுதேவாவுக்கு இந்த படத்தில் ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.

பட்டாஸ்

பட்டாஸ்

வரும் பொங்கலுக்கு மாமனார் ரஜினியுடன் மோத மருமகன் தனுஷ் தயாராகியுள்ளார். வரும் ஜனவரி 16ம் தேதி பொங்கல் கொண்டாட்டமாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், மெஹ்ரின் பிர்ஸடா, சிநேகா நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படமும் திரைக்கு வருகிறது.

எம்.ஜி.ஆர் மகன்

எம்.ஜி.ஆர் மகன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களை இயக்கிய இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எம்.ஜி.ஆர் மகன் திரைப்படமும் வரும் பொங்கல் போட்டிக்கு தயாராகியுள்ளது. கிராமத்து சப்ஜெக்ட் என்பதால், எம்.ஜி.ஆர் மகன் படத்திற்கான வரவேற்பு நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமோ

சுமோ

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவின் சுமோ திரைப்படமும் வரும் பொங்கல் ரேசில் கலந்து கொள்கிறது. எல்.கே.ஜி. படத்தைத் தொடர்ந்து வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மற்றுமொரு காமெடி படமாக உருவாகியுள்ள சுமோ படம் ரசிகர்களை வரும் பொங்கல் பண்டிகைக்கு சிரிக்கவைக்கும் என்று தெரிகிறது.

சசிகுமார்

சசிகுமார்

கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் மற்றொரு படமான ராஜவம்சம் படமும் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொம்பு வச்ச சிங்கம்டா படமும் பொங்கலுக்கு வரும் என அந்த தயாரிப்பு நிறுவனமும் அடம் பிடிக்கிறது. சசிகுமாரின் மூன்று படங்கள் எப்படி பொங்கலுக்கு வெளியாகும் என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், சுமூகமாக பேசி ஒவ்வொரு படமாக ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் சசிகுமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X