2020ம் ஆண்டு காமெடியில் கலக்கியவர்கள் யார்? விவேக் முதல் ஊர்வசி வரை.. டாப் 5 லிஸ்ட் இதோ!
சென்னை: 2020ம் ஆண்டு குறைந்த அளவிலே திரைப்படங்கள் வெளியான நிலையில், இந்த ஆண்டு காமெடியில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்கள் யார் என்பதை காணலாம்.
நகைச்சுவையில் ரசிகர்களை ஏராளமான காமெடி நடிகர்கள் கட்டிப் போட்டு வருகின்றனர்.
இந்த கொரோனா கலவரத்துக்கு நடுவிலும் ரசிகர்களை சிரிக்க வைத்த டாப் 5 காமெடி கலைஞர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

5. ஷாரா
கடந்த ஆண்டு கோமாளி திரைப்படத்தில் காமெடியில் கலக்கிய நடிகர் ஷாரா இந்த ஆண்டு ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங்கிற்கு நண்பனாக நடித்து நகைச்சுவையில் பட்டையை கிளப்பினார். நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் நடிப்பதில் ஷாரா நல்லாவே ஸ்கோர் செய்கிறார்.

4. பிக் பாஸ் டேனியல்
தீபாவளிக்கு வெளியான இரண்டாம் குத்து திரைப்படத்தில் வேற லெவல் காமெடி பண்ண பிக் பாஸ் டேனியல் இந்த டாப் 5 இடத்தில் 4ம் இடத்தை பிடித்துள்ளார். இயக்குநர் சந்தோஷ் ஹீரோவாக அறிமுகமான நிலையில், அவரை ஹீரோ அந்தஸ்த்துக்கு வைத்திருக்க ரொம்பவே போராடியதில் டேனியலுக்கு பெரும் பங்கு உள்ளது.

3. யோகி பாபு
கடந்த ஆண்டு 30க்கும் மேற்பட்ட படங்களில் யோகி பாபு நடித்து இருந்தார். இந்த ஆண்டு மொத்தமே அத்தனை படங்கள் தான் வெளியாகி இருக்கும் போல, அதிலும் பொங்கலுக்கு தர்பார், பிப்ரவரியில் டகால்டி, லாக்டவுனில் காக்டெயில் உள்ளிட்ட சில படங்களில் நடித்து தனது ரசிகர்களை வழக்கம் போல மகிழ்வித்தார் யோகி பாபு.

2. ஊர்வசி
2020ம் ஆண்டு மூக்குத்தி புத்தம் புது காலை, மூக்குத்தி அம்மன், சூரரைப் போற்று என பேக் டு பேக் பவர்ஃபுல் பர்பாமை கொடுத்தவர் நடிப்பு ராட்சஷி ஊர்வசி. ஆர்.ஜே. பாலாஜி மற்றும் நயன்தாரா நடிப்பில் தீபாவளிக்கு வந்த மூக்குத்தி அம்மன் படத்தில் வேற லெவல் காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்தார் ஊர்வசி.

விவேக்
ஃபெர்டிலிட்டி கிளீனிக் நடத்தும் டாக்டர் கண்ணதாசன் கதாபாத்திரத்தில் நடித்து இந்த ஆண்டு ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார் சின்னக் கலைவாணர் விவேக். உத்தமபுத்திரன் படத்திற்கு பிறகு விவேக்கிற்கு காமெடியில் நல்ல ஸ்கோப் கிடைத்தது இந்த படத்தில் தான் என்று சொல்லலாம். ஹரிஷ் கல்யாணை விவேக் படாத பாடு படுத்தும் காட்சிகள் ரசனை!


Click it and Unblock the Notifications











