அட.. தோனியைவிட பெரிய ஆளா ஆலியாபட்?...சர்வே சுவாரஸ்யம்!
டெல்லி : 2021-ம் ஆண்டில் இந்தியாவின் செல்வாக்கு மிக்க பிரபலங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
இதில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.
முதலிடத்தைப் பிடித்த விராட் கோலிக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

செல்வாக்கு மிக்க பிரபலம்
டஃப் அண்ட் பெல்ப்ஸ் செலிபிரிட்டி பிராண்ட் ஆண்டுதோறும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில், எம்.எஸ் தோனி மற்றும் விராட் கோலி இந்த தலைமுறை இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள். இவர்கள் இருவரும் கிரிக்கெட் விளையாட்டின் சிறந்த பங்களிப்புகளுக்காக பல விருதுகளை வென்றுள்ளனர். கிரிக்கெட்டின் டைனமிக் இரட்டையர்கள் விளையாட்டை எட்டாத உயரத்திற்கு கொண்டு சென்று விளையாட்டில் சுவாரசியத்தை கூட்டி விடுவதில் வல்லவர்கள்.

விராட் கோலி
சமீபத்தில் 2021ம் ஆண்டில் இந்தியாவின் செல்வாக்கு மிக்க பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் மதிப்பீட்டில் 52 மில்லியன் டாலர்கள் பெரும் சரிவைச் சந்தித்த போதிலும், விராட் கோலி தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்தியாவின் பிரபலமானவராக தேர்வாகி உள்ளார்.

ஆலியா பட்
அதேபோல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இரண்டாவது இடத்தையும், அக்ஷய் குமார் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். நடிகை ஆலியா பட் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கங்குபாய் கத்வாடியா படத்தில் மும்பை கேங்ஸ்டாராக நடித்திருந்தார். இத்திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. இதுவே ஆலியா பட் 4வது இடத்தை பிடிக்க காரணம் என கூறப்படுகிறது.
Recommended Video

தோனிக்கு 5வது இடம்
இந்த பட்டியலில் எம்.எஸ் தோனி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். 2011 உலகக் கோப்பை பெற்றுத்தந்த நம்ம தல தோனி தற்போது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த பட்டியலைப் பார்த்த தோனியின் தீவிர ரசிகர்கள் தோனியை விட ஆலியா பட் பெரிய ஆளா என கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











