போன எலக்‌ஷனுக்கு வலிமை அப்டேட்.. இந்த எலக்‌ஷனுக்கு ஜன நாயகன் அப்டேட்டா? முடிவுக்கு வரமாட்டீங்கறாங்களே?

சென்னை: தமிழ் சினிமா நட்சத்திரங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை பலரும் காத்திருக்கும் படம் விஜய் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ள ஜன நாயகன். கே.வி.என் புரெடக்‌ஷன்ஸ் தயாரிக்க, ஹெச். வினோத் படத்தை இயக்கி உள்ளார். படம் கடந்த மாதம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் படத்திற்கு சென்சார் கிடைக்காததால் படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இப்படி இருக்கையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முயற்சிப்பதாகவும், ஆனால் சில அரசியல் அழுத்தங்களால் படம் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தான் ரிலீஸ் ஆகும் என்றும் பேச்சுக்கள் மாறி மாறி ஓடிக் கொண்டு உள்ளது.

இப்படி இருக்கையில், கடந்த முறை அதாவது 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்ற போது நடைபெற்ற சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதாவது, தேர்தலில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த நிலையில், அஜித் ரசிகர்கள் அரசியல் தலைவர்களிடம் அஜித் அப்போது நடித்துக் கொண்டிருந்த படமான வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.

2021 TN Election Campaign Fills With Valimai Update 2026 Election Maybe With Jana Nayagan Update Both Directed By H Vinoth

சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாக படம் குறித்து எந்த அப்டேட்டும் படக்குழு தரப்பில் தெரிவிக்காத நிலையில், ரசிகர்கள் படம் எப்போதுதான் ரிலீஸ் ஆகும் என்பதைத் தெரிந்து கொள்ள எடுத்த பல கட்ட முயற்சிகளில் இதுவும் ஒன்று. அதாவது, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களிடம் வலிமை அப்டேட் கேட்டார்கள். அதேபோல், ஐபிஎல் விளையாட வந்த வடமாநில கிரிக்கெட் வீரர்களிடமும் வெளிநாட்டு வீரர்களிடம் வலிமை அப்டேட் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.

சர்வதேச அளவில் கவனம் பெறும் நிகழ்வில் கலந்து கொள்ளும் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் என்ற வாசகம் நிறைந்த ஒரு போர்டு இருந்தால் போதும் அது உடனே உலகம் முழுவதும் ஹேஷ்டேக் உடன் டிரெண்ட் ஆனதை எல்லாம் கடந்த காலத்தில் பார்த்தோம்.

ரிலீஸ் ஆகுமா?: இதே போன்ற நிலைமை தற்போது ஜன நாயகன் படத்திற்கும் வந்து விடுமோ என்ற எண்ணம் லேசாக எழ ஆரம்பித்துள்ளது. அதுவும் படக்குழு சென்சார் சான்றிதழுக்காக தொடுத்த வழக்கை திரும்ப பெற்றுவிட்டு, சென்சார் நிறுவனம் சொல்வதைக் கேட்டுக் கொள்ள முடிவெடுத்துள்ளது. ஆனாலும் இன்னும் வழக்கை திரும்பப் பெறும் பிராசஸ் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது எப்போது முடியும் என்று தெரியாததால் படத்திற்கு எப்போது சென்சார் கிடைக்கும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

2021 TN Election Campaign Fills With Valimai Update 2026 Election Maybe With Jana Nayagan Update Both Directed By H Vinoth

ரசிகர்கள் ஏமாற்றம்: படம் பிப்ரவரி மாதம் வெளியாகி விடும், என்று நம்பிக் கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு நாள் ஆக ஆக அந்த நம்பிக்கையும் தேய்ந்து கொண்டு உள்ளது. வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் உலக அளவில் டிரெண்ட் ஆகிக் கொண்டு இருந்த போது விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை கலாய்த்து கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது அப்படியே விஜய் ரசிகர்களை அஜித் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். இதில் என்ன சுவாரஸ்யமான விஷயம் என்றால் வலிமை மற்றும் ஜன நாயகன் என இரண்டு படங்களின் இயக்குநர் ஹெச். வினோத் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X