Don't Miss!
- Technology
பூமியில் பிளாக் ஹோல்: செயற்கையாக உருவாக்கப்பட்ட கருந்துளை.! மிரளவைக்கும் விஞ்ஞானிகள்.!
- News
42 லட்சம் பேர் இணைக்கவில்லை.. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இன்னும் 3 நாட்களே கால அவகாசம்!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Finance
கூகுள் ஊழியரின் கண்ணீர்..பிரசவ அறை,4கை குழந்தை, தாய் மரணம்,இண்டர்வியூவ்-க்கு மத்தியில் பணிநீக்கம்..!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய புதிய ஹூண்டாய் ஐ10... விலை இவ்ளோதானா! மாருதி, டாடா கார்களின் கதையை முடிக்க போகுது!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து மீண்ட கோலிவுட்… 2022ல் மஜா செய்த படங்கள் எது எதுன்னு தெரியுமா?
சென்னை: 2019ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் திரையரங்குகளும் மூடப்பட்டன.
சும்மாவே டிக்கெட் விலை, பார்க்கிங் கட்டணம் போன்றவைகளால் திரையரங்குகளின் நிலைமை மோசமாக இருந்தது.
அதேநேரம் ஓடிடிகளின் வருகையும் அதிகமானதால், இனி மக்கள் திரையரங்குகளுக்கு செல்வார்களா என்ற கேள்வி எழுந்தது.
சங்க
காலத்திலேயே
இந்து
மதம்
இருந்தது..
சிலருக்கு
பயம்
இருக்கத்தானே
செய்யும்..
மோகன்
ஜி
பேட்டி!

முடங்கிய திரைத்துறை
கடந்த சில வருடங்களாகவே திரையரங்குகளின் டிக்கெட் விலை, பார்க்கிங் கட்டணம் போன்றவைகள் குறித்து அதிகம் விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் மக்கள் திரையரங்குகளுக்கு செல்வது சந்தேகம் தான் என சொல்லப்பட்டது. இதனிடையே 2019 இறுதியில் கொரோனா தொற்றால் முழுமையான ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டன. இதனால் திரையுலகம் மீண்டும் உயிர்ப்பெறுமா என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது. ஆனால், 2021ல் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர், சிவகார்த்திகேயனின் டாக்டர் ஆகிய படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூலித்து கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தன.

மீண்ட கோலிவுட்
கொரோனா தளர்வுகள் முழுமையானதும் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படங்களின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கின. இதனால், 2022ல் இருந்து மீண்டும் படங்களின் ரிலீஸ் வேகமெடுத்தன. ஓடிடி பக்கம் செல்லவிருந்த படங்கள் அனைத்தும் திரையரங்குகளில் ரிலீஸாகின. பிப்ரவரியில் வெளியான அஜித்தின் வலிமை, பாக்ஸ் ஆபிசில் 100 கோடி வசூலை முதலில் தொடங்கி வைத்தது. கலவையான விமர்சனங்களையும் இந்தப் படம் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

2022 பொற்காலம்
அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் வெளியான சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படம் ஃபேமிலி ஆடியன்ஸை தியேட்டர்கள் பக்கம் வரவைத்தது. அடுத்து ஏப்ரலில் வெளியான விஜய்யின் பீஸ்ட், எதிர்ம்றையான விமர்சனங்களைப் பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் ருத்ரதாண்டவம் ஆடியது. இதையெல்லாம் அடித்து துவம்சம் செய்வதைப் போல கமலின் விக்ரம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸியில் அதுவரை எந்த தமிழ்ப் படங்களும் செய்யாத சாதனையை படைத்தது. விக்ரம் திரைப்படத்தின் மெகா வெற்றி இந்தியத் திரையுலகையே அதிர வைத்தது. இதே நேரத்தில் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி மரண அடி வங்கியது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன்
விக்ரம் படத்தின் சாதனையை பற்றி பேசி முடிக்கும் முன்னர், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் வெளியாகி, சுனாமியாக வசூலை வாரிக்குவித்து வருகிறது. இதனிடையே விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்தியேனின் டான், தனுஷின் திருச்சிற்றம்பலம், சிம்புவின் வெந்து தணிந்தது காடு. கார்த்தியின் விருமன் ஆகிய படங்களும் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டின. இந்தாண்டு மட்டும் தமிழ்த் திரையுலகில் சுமார் 2000 கோடிக்கு பிசினஸ் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சின்ன பட்ஜெட் படங்கள் நிலை
அதேநேரம் பெரிய பட்ஜெட் படங்களின் வெற்றி பல சிறிய படங்களுக்கான தியேட்டர் ரிலீஸை தட்டிப் பரித்தன. பெரிய பட்ஜெட் படங்கள் மொத்தமாக திரையரங்குகளை ஆக்கிரமித்துவிட்டதால், டாணாக்காரன், தேஜாவு போன்ற படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இதனால், சமநிலையற்ற பாதையில் திரையுலகம் சென்றுகொண்டிருப்பதும் கொஞ்சம் சிக்கலானது என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தீபாவளிக்கு பிரின்ஸ், சர்தார் படங்களும், அதனைத் தொடர்ந்து பத்து தல, வாத்தி ஆகிய படங்களும் வெளியாகின்றன. இதனால், கோலிவுட்டுக்கு இந்தாண்டு தரமான சம்பம் தான் என நெட்டிசன்கள் சிலாகித்து வருகின்றனர்.