தீபாவளி..தல தீபாவளி.. இந்த ஆண்டு ‘தல‘ தீபாவளி கொண்டாடும் திரை பிரபலங்கள்!
சென்னை : தீபாவளி என்றாலே புது ஆடை,பட்டாசு, இனிப்பு, பலகாரம் என சும்மா தரமா இருக்கும்.இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நாளுக்காக காத்திருப்பார்கள்.
புதிதாக திருமணமான தம்பதிகள் தங்களது முதல் தீபாவளியை தல தீபாவளியாக கொண்டாடுவது வழக்கம். பெண் வீட்டிலிருந்து மருமகன்களுக்கு தல தீபாவளி பரிசாக புத்தாடைகள், புது நகைகள் மற்றும் இனிப்பு பலகாரங்கள், பரிசு பொருட்களை கொடுத்து, தீபாவளி தடபுடலாக இருக்கும்.
இந்த ஆண்டு 'தல' தீபாவளி கொண்டாடும் திரை பிரபலங்கள் யார் யார் என்று பார்க்கலாமா?

நயன்தாரா - விக்கி
பல ஆண்டுகளாக காதலித்து வந்த காதல் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனும் ஜூன் மாதம் 9ந் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பல கோவில்களிலிருந்து வரவழைக்கப்பட்ட புரோகிதர்கள் வேத மந்திரம் ஓத திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் விரைவில் வெளியிட உள்ளது

குழந்தைகளுடன் தல தீபாவளி
திருமணமான 4 மாதத்தில் வாடகைத்தாய் முறையில் இருவரும் பெற்றோர்களாகி உள்ளனர். நயன்தாரா வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டது இணையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த நட்சத்திர தம்பதிகளோடு சேர்த்து நயன்தாராவின் குழந்தைகளுக்கும் இந்த ஆண்டு தல தீபாவளிதான்.

ஆதி - நிக்கி கல்ராணி
நடிகர் ஆதி - நடிகை நிக்கி கல்ராணியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்களது திருமணம் மே மாதம் தடபுடலாக நடந்தது. இதில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர். மெஹந்தி, சங்கீத்,திருமண புகைப்படம் என பல சடங்குகள் நடத்தப்பட்டன.

ஆலியா பட் - ரன்பீர் கபூர்
பிரபல பாலிவுட் ஜோடி ஆலியா பட் ரன்பீர் கபூர் தம்பதியினருக்கு கடந்த ஏப்ரல் 14ஆம் நாள் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. ஆலியா பட் ரன்பீர் கபூரும் முதல் படத்தில் இணைந்து நடித்த போது காதலிக்கத் தொடங்கி இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.தற்போது நடிகை ஆலியா கர்ப்பமாக இருக்கிறார்.பாலிவுட்டில் தல தீபாவளி கொண்டாடும் நட்சத்திர தம்பதிகள் இவர்கள் ஆவர்.

ரவீந்தரன் – மகாலட்சுமி
தயாரிப்பாளர் ரவீந்தரன் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியும் செப்டம்பர் 1ந் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் சோஷியல் மீடியாவையே திணற அடித்தது. யூடியூப், சேனல் என எங்கு பார்த்தாலும் இவர்கள் பற்றிய பேச்சுத்தான் இருந்தன. இந்த தம்பதிக்கும் இந்த ஆண்டு தல தீபாவளிதான்.

தீபக் சாஹர் தன் காதலி
இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தன் காதலி ஜெயா பரத்வாஜை கடந்த ஜூன் மாதம் கரம் பிடித்தார். அவர்களின் மெஹந்தி மற்றும் திருமணத்திற்கு முந்தைய பிற சடங்குகளின் படங்கள் திருமண போட்டோக்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. இந்த புதுமண தம்பதிக்கும் இது தல தீபாவளிதான்.


Click it and Unblock the Notifications











