2023 Highest Paid Actor: ரஜினி, விஜய்யை ஓரங்கட்டிய கமல்... அதிக சம்பளம் வாங்கும் உலக நாயகன்!
சென்னை: கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோர் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர். இவர்கள் தவிர சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம், சூர்யா, கார்த்தி ஆகியோரும் லீடிங்கில் உள்ளனர். இந்நிலையில், அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் கமல்ஹாசன் தான் டாப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி, விஜய்யை ஓரங்கட்டிய கமல்
கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல், விஜய், அஜித் ஆகியோரிடையே பலத்த போட்டி காணப்படுகிறது. இதில் ரஜினி, விஜய் தான் மாறி மாறி முன்னிலை வகித்தாலும், கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் கமலுக்கு தரமான கம்பேக் கொடுத்தது. இதனையடுத்து கமல்ஹாசனும் தற்போது டஃப் கொடுத்து வருகிறார். இந்நிலையில் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதனடிப்படையில் முதல் இடத்தில் ரஜினி, விஜய்யை ஓவர்டேக் செய்துள்ளார் கமல்ஹாசன். விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்து வரும் கமல், அடுத்து மணிரத்னத்துடன் இணையவுள்ளார். இந்தப் படத்திற்காக கமல்ஹாசனுக்கு 125 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதுதான் கோலிவுட்டில் அதிக சம்பளம் என்றும் சொல்லப்படுகிறது. முன்னதாக கல்கி படத்தில் நடிக்க கமலுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் இரண்டாவது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் இயக்கும் தலைவர் 171 படத்துக்காக 120 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். முன்னதாக ஜெயிலர் படத்துக்காக ரஜினி 150 கோடி வாங்கியதாக சொல்லப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை என்றும், ரஜினியின் கேரியரில் தலைவர் 171 படத்துக்கு தான் ரஜினி அதிக சம்பளம் வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த லிஸ்ட்டில் விஜய்யை ஓவர்டேக் செய்து மூன்றாவது இடம் பிடித்துள்ளார் அஜித். அதன்படி, மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்துக்காக அஜித்துக்கு 110 கோடி ரூபாய் சம்பளம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தளபதி 68 படத்திற்காக விஜய்க்கு 100 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஆனால், விஜய் 175 கோடி ரூபாய் சம்பளம் என மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை என தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வரிசையில், தனுஷ் ஒரு படத்துக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். அவருக்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் எஸ்கே 21 படத்துக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம். சூர்யா ஒரு படத்துக்கு 30 கோடியும், விஜய் சேதுபதி 25 கோடி ரூபாயும், விக்ரம் 15 கோடியும், சிம்பு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











