2023 South Asia Celebrities: 2023 தெற்காசிய பிரபலங்கள்... விஜய், AR ரஹ்மான் மாஸ்... தலைவர் க்ளோஸ்!

சென்னை: 2023ம் ஆண்டு தெற்கு ஆசியாவில் பிரபலமான நட்சத்திரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தளபதி விஜய், ஏஆர் ரஹ்மான், கமல்ஹாசன் ஆகியோர் கோலிவுட்டில் இருந்து இடம்பெற்ற பிரபலங்களில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.

2023 தெற்காசிய பிரபலங்கள்
2023ம் ஆண்டு பிரபலமான தெற்காசிய நட்சத்திரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். இந்தாண்டு மட்டும் பதான், ஜவான் என மெஹா ஹிட் படங்களை கொடுத்துள்ளார் ஷாருக்கான். இந்த இரண்டு படங்களுமே ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்தன. இதனைத் தொடர்ந்து வரும் 22ம் தேதி ஷாருக்கானின் டுங்கி திரைப்படம் வெளியாகிறது. இதனால் ஷாருக்கான் முதல் இடம் பிடித்துள்ளார்.

 2023 South Asia Celebrities: Vijay and AR Rahman featured in South Asian Celebrities 2023 list

ஷாருக்கானைத் தொடர்ந்து ஆலியா பட் இரண்டாவது இடத்திலும், பிரியங்கா சோப்ரா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். அதேபோல், ரன்பீர் கபூர் 6வது இடம் பிடித்துள்ளார். சல்மான் கான் உட்பட பாலிவுட் பிரபலங்களுக்கு மத்தியில் ஆலியா பட், பிரியங்கா சோப்ரா 2வது, 3வது இடங்களை பிடித்துள்ளனர். 7வது இடத்தை பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட்டில் இருந்து விஜய் மட்டுமே முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளார். அதன்படி விஜய்க்கு 8வது இடம் கிடைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல்ஹாசன், அஜித், கேஜிஎஃப் பிரபலம் யாஷ், டோலிவுட் பிரபலங்கள் ராம் சரண், பிரபாஸ் ஆகியோரை விட விஜய் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய் நடிப்பில் இந்தாண்டு வாரிசு, லியோ படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களும் சேர்ந்து பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்குப் பின்னர் கோலிவுட்டில் இருந்து ஏஆர் ரஹ்மான் 21வது இடம் பிடித்துள்ளார். பொன்னியின் செல்வன் 2, பத்து தல, மாமன்னன், இந்தியில் பிப்பா, மைதான் ஆகிய படங்கள் வெளியாகின. ஏஆர் ரஹ்மானை தொடர்ந்து இந்தப் பட்டியலில் உலக நாயகன் கமல்ஹாசன் 23வது இடத்தில் உள்ளார். கமல் நடிப்பில் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்திருந்தது. தற்போது அவர் இந்தியன் 2, கல்கி, தக் லைஃப் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

2023 தெற்காசிய பிரபலங்கள் பட்டியலில் இந்தி பாடகர் அர்ஜித் சிங் 13வது இடத்திலும், தீபிகா படுகோன் 19 இடத்திலும் உள்ளனர். டோலிவுட் ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர் 25 இடமும் பிடித்துள்ளார். தமிழில் இருந்து விஜய் மட்டுமே முதல் 10 இடங்களில் ஒருவராக, அதாவது 8வது இடம் பிடித்துள்ளார். அதேபோல், விஜய், ஏஆர் ரஹ்மான், கமல்ஹாசன் ஆகியோர் தான் 25 இடங்களுக்குள் தேர்வாகியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X