2023 Year Ender: விஜயகாந்த் முதல் போண்டா மணி வரை... 2023ல் மறைந்த திரை பிரபலங்கள்!!

சென்னை: கடந்த 28ம் தேதி கேப்டன் விஜயகாந்த் காலமானார். விஜயகாந்தின் மறைவு தமிழ்த் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதேபோல், சரத்பாபு, மனோபாலா, மாரிமுத்து, போண்டா மணி உள்ளிட்ட மேலும் பல பிரபலங்கள் இந்தாண்டு உயிரிழந்தனர். அவர்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

2023ல் மறைந்த பிரபலங்கள்: 2023ம் ஆண்டு இன்றோடு முடிவுக்கு வரும் நிலையில், விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. புரட்சிக் கலைஞர், கேப்டன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த், டிச.28ம் தேதி நிமோனியா பாதிப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து அரசு மரியாதையுடன் நடந்த இறுதிச் சடங்கில் சுமார் 15 லட்சம் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 2023 Year Ender: Vijayakanth, Sarath Babu, Marimuthu, and more over Cine celebrities who died in 2023

அதேபோல், முன்னணி நடிகரான சரத்பாபு, மே 22ம் தேதி உயிரிழந்தார். 1980, 90-களில் தமிழ், தெலுங்கில் முன்னனி நடிகராக வலம் வந்தவர் சரத்பாபு. கடைசியாக சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில் படத்தில் சரத்பாபுவும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல்ஹாசன் என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தவர் சரத்பாபு.

தமிழ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய இன்னொரு பிரபலம் மனோபாலா. இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என கோலிவுட்டில் முக்கியமான ஆளுமையாக வலம் வந்தவர் மனோ பாலா. கடந்த சில வருடங்களாக ஏராளமான படங்களில் காமெடியனாக நடித்து வந்த மனோபாலா, மே 3ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். மனோபாலாவின் மறைவும் தமிழ் ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதேபோல் பிரபல காமெடி நடிகர் மயில்சாமியின் மரணமும் தமிழ்த் திரையுலகிற்கு பெரும் இழப்பாக அமைந்தது. நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த மனித பண்பாளராகவும் வலம் வந்தவர் மயில்சாமி. பேரிடர் காலங்களில் மக்களுக்காக களத்தில் இறங்கி பல உதவிகளை செய்துள்ள மயில்சாமி, அக்டோபர் 2ம் தேதி திடீரென உயிரிழந்தார். விஜயகாந்துக்குப் பின்னர் மயில்சாமியின் மறைவுக்கும் அதிகளவில் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

முக்கியமாக எதிர் நீச்சல் சீரியல் மூலம் பெரியளவில் பிரபலமான மாரிமுத்து செப்டம்பர் 8ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இயக்குநராக சக்சஸ் செய்ய முடியாத மாரிமுத்து படங்களில் வில்லன் கேரக்டர்களில் நடித்து வந்தார். ஆனால் எதிர் நீச்சல் சீரியல் தான் அவருக்கு பெரிய கம்பேக் கொடுத்தது. சமீபத்தில் தான் அதிக பட வாய்ப்புகள் கிடைத்து வந்த நிலையில் மாரிமுத்து உயிரிழந்தது ரசிகர்களை அதிச்சியில் ஆழ்த்தியது.

இவர்களது வரிசையில், நடிகர்கள் கங்கா, ஜூனியர் பாலையா, ஆர்.எஸ் சிவாஜி, 'என்னுயிர்த் தோழன்' பாபு, ராம்தாஸ், கசன் கான், போண்டா மணி ஆகியோரும் இந்தாண்டு உயிரிழந்தனர். அதேபோல், இயக்குநர்கள் டிபி கஜேந்திரன், சித்திக், தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி, ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் ஆகியோரும் 2023ம் ஆண்டு உயிரிழந்த பிரபலங்கள் ஆகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X