அப்போ இந்த சம்மருக்கும் பெரிய வசூலுக்கு வாய்ப்பே இல்லையா?.. இப்படி எல்லா படமும் தள்ளிப்போகுதே!

சென்னை: இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான படங்கள் பெரிதாக வசூல் வேட்டையை நடத்தாத நிலையில், பிப்ரவரி மாதம் வெளியான படங்களும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யவில்லை. எப்படியும் ஏப்ரல் அல்லது மே மாதம் பல பெரிய படங்கள் இந்த ஆண்டு வெளியாகும் என்றும் மிகப்பெரிய வசூல் வேட்டையை தமிழ் சினிமா அள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கும் வாய்ப்பில்லை ராஜா என்கின்றனர்.

இந்த ஆண்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படங்கள் வெளியாக உள்ளன. கடந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் கோலிவுட் சினிமா கலக்கியது போல இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸை பிரித்து மேய போகிறார்கள் இதை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆரம்பமே பெரிய துவக்கத்தை கொடுக்காமல் கோலிவுட் தவறிவிட்டது.

2024 Summer expected release movies like Kanguva, GOAT, Vettaiyan, Indian 2 gets postponed

எதிர்பார்க்கப்படும் பெரிய படங்கள்: இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் மிகப் பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2, ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன், அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி, விஜய் டபுள் ஆக்ஷனில் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், சிவகார்த்திகேயனின் எஸ்கே 21, விஜய் சேதுபதி மற்றும் சூரி நடித்துள்ள விடுதலை 2 உள்ளிட்டபடங்கள் பாக்ஸ் ஆபிஸில் பல இண்டஸ்ட்ரி ஹிட் படங்களைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்மருக்கு சான்ஸ் இல்லை: இதில், பல படங்கள் ஏப்ரல் மற்றும் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சம்மருக்கு எந்தப் படமும் வெளியாக வாய்ப்பில்லை என்கிற தகவல் தியேட்டர் ஓனர்களை திண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. சூர்யாவின் கங்குவா, அஜித்தின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் இந்தியன் 2, ரஜினிகாந்தின் வேட்டையன் உள்ளிட்ட படங்கள் ஆயுதபூஜை மற்றும் தீபாவளிக்குத்தான் வெளியாகப் போகிறது என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், முதல் பாதி பாக்ஸ் ஆபிஸில் கோலிவுட் பெரிதளவில் தடுமாறும் என்பது உறுதியாகி உள்ளது.

கரண்ட் பில் கட்டக் கூட முடியல: உதயம் உள்ளிட்ட தியேட்டர்கள் மூடு விழாவையே செய்து விட்டன. சில பிவிஆர் உள்ளிட்ட மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் தின்பண்டங்களில் அதிக விலையை வைத்து தியேட்டர் பிசினஸை நடத்தி வருகின்றனர். பல சிறிய தியேட்டர்கள் கரண்ட் பில் கட்டக் கூட காசு இல்லை என்கிற நிலையில் தான் தவித்து வருகின்றனர்.

வசூல் வரும்போது ஹேப்பி: கோடி கோடியாக பெரிய நடிகர்கள் படங்களின் வசூல் வரும்போது ஹேப்பியாக இருக்கும் தியேட்டர் ஓனர்கள் பெரிய படங்களின் ரிலீஸ் குறையும் போது கஷ்டப்படுகின்றனர். முதல் பாதி டல் அடித்தாலும், இரண்டாம் பாதியில் இந்த ஆண்டு தியேட்டர்கள் விட்டதை பிடித்து விடுவார்கள் என்றே கூறப்படுகிறது. ஆனால், ஆரம்பத்தில் வந்த அயலான், கேப்டன் மில்லர், சிங்கப்பூர் சலூன், லால் சலாம் போன்ற படங்கள் வசூல் குவிக்காததை போல அந்த படங்களும் ஒருவேளை சொதப்பி விட்டால் நிலைமை திண்டாட்டம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X