Cringe Movies of 2025: இந்த ஆண்டு வெளியான டாப் 5 கிரிஞ்ச் படங்கள்.. முதலிடத்தில் என்ன படம்னு பாருங்க!
சென்னை: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிகளவில் வீக்கான படங்கள் வெளியான நிலையில், கன்னடம், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகங்கள் லீடில் உள்ளன. கோலிவுட்டில் நல்ல படங்கள் மற்றும் கமர்ஷியல் படங்கள் வெளியாவது முற்றிலுமாக குறைந்து கிரிஞ்ச் படங்கள் தான் அதிகம் வெளியாவதாக ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.
ஒன் இந்தியா தமிழ் நடத்திய கருத்துக் கணிப்பில் ஏகப்பட்ட இளம் ரசிகர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சில குறிப்பிட்ட பாப்புலரான படங்களை கிரிஞ்ச் படங்கள் எனக் கூறியுள்ளனர்.

இந்த ஆண்டு அதிகளவில் தியேட்டருக்கு ரசிகர்களை ஈர்த்த வெகு சில படங்களே அந்த வரிசையில் இடம்பெற்றிருப்பது தான் இதில், மிகப்பெரிய வேடிக்கையாக மாறியுள்ளது. ரசிகர்கள் சொன்ன டாப் 5 கிரிஞ்ச் படங்கள் குறித்த வரிசையை இங்கே பார்க்கலாம் வாங்க..

இட்லி கடை: தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படத்தை சில ரசிகர்கள் இந்த ஆண்டின் ரொம்பவே கிரிஞ்சான மூவி என கலாய்த்துள்ளனர். நடிகர் தனுஷ் நல்லா படிச்சு, வெளிநாட்டில் வேலை பார்த்து செட்டில் ஆக வேண்டியதை விட்டுட்டு, சொந்த ஊரில் வந்து கொட்டா இட்லி கடையில் வேலையை பார்ப்பது, அவரை பழிவாங்க அருண் விஜய் குடும்பத்துடன் வந்து உட்கார்ந்துக் கொண்டு செய்யும் வேலைகள், கடைசியில், வில்லனை மாவாட்ட வைப்பது என படமே கிரிஞ்ச் தான் என கலாய்த்து வருகின்றனர்.
தக் லைஃப்: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான தக் லைஃப் திரைப்படம் கிரிஞ்ச் படம் என்று சொல்வதை விட இந்த ஆண்டின் வொர்ஸ்ட்டான படம் என்றே சொல்லலாம் என ரசிகர்கள் கூறியுள்ளனர். த்ரிஷாவுக்காக கமலை எதிர்த்து சிம்பு சண்டை செய்வதெல்லாம் டோட்டல் கிரிஞ்சு என்றும் 2ம் பாதியில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கத்துக் கொண்டு கமல் ஒவ்வொருவரையாக பழி வாங்குவது எல்லாம் மரண மொக்கை என கலாய்த்து வருகின்றனர்.

குட் பேட் அக்லி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, சுனில், பிரியா வாரியர், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸில் ரசிகர்களை திருப்திப்படுத்தினாலும் படமாக ஒட்டுமொத்தமாகவே ஒரு கிரிஞ்சு குடோன் தான் என்கின்றனர். அஜித் படங்களின் மாஷ் அப்பாகவே குட் பேட் அக்லி இருந்ததாக ரசிகைகள் சிலரே கழுவி ஊற்றியுள்ளனர்.
கூலி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், செளபின் சாஹீர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் தான் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் ஈட்டிய நம்பர் ஒன் படம். ஆனால், படத்தின் கதையே கிரிஞ்சாக இருந்தது என்றும் ஸ்ருதி ஹாசன் மற்றும் கிளைமேக்ஸில் அமீர்கானை அழைத்து வந்து துண்டு பீடி பிடிக்க வைத்து ரொம்பவே கிரிஞ்சு செய்து விட்டனர் என்கின்றனர்.
2025-ன் Cringe ஆன படம் என்னனு தெரியுமா?#2025Reloaded #YearEnder2025 #PublicOpinion #VoxPop #OneIndia #TamilOneIndia pic.twitter.com/0ZX3zKWdDR
— Oneindia Tamil (@thatsTamil) December 19, 2025
முதலிடத்தில் டியூட்: இந்த ஆண்டு ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்த நல்ல கமர்ஷியல் படமாக பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தை பலரும் சொல்லி வரும் நிலையில், கிரிஞ்சு படம் என அதே பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படத்தை தான் பலரும் கூறி வருகின்றனர். சாய் அபயங்கரின் ஊறும் பிளட் பாட்டுக்காக மட்டுமே படத்தை பார்த்தோம் என்றும் படத்தில் பல விஷயங்கள் கிரிஞ்சு ஓவர்மேக்ஸ் என்கின்றனர். அடுத்த ஆண்டு தமிழ் சினிமா படங்கள் தரமானதாக வெளியாக இயக்குநர்கள் ரசிகர்களின் கருத்தை ஆராய்ந்து உழைக்க வேண்டும். 2025 படங்களே பரவாயில்லை என சொல்லும் அளவுக்கு ஆகாமல் இருந்தால் சரி!


Click it and Unblock the Notifications











