சின்ன கல்லு.. பெத்த லாபம்.. சத்தமில்லாமல் சாதித்த படங்கள்.. நூறு சாமி, கட்டா குஸ்தி 2.. செம வசூல்!

சென்னை: தமிழ் சினிமா கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தொடர்ந்து சரியான பாதையிலேயே சென்றுக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகவில்லை என்றால், தமிழ் சினிமாவே காலி என்றெல்லாம் கதை விடுபவர்கள் வீட்டுக்குளேயே இருங்க என்றும் நல்ல கதைகளும், படங்களும் வந்தால் மக்கள் தாராளமாக ஓடிடியை தாண்டி தியேட்டருக்குச் சென்று பார்க்கத்தான் செய்வார்கள் என்பதை முகத்தில் அறைந்தது போல காட்டி வருகிறது.

வாரம் 6 படங்கள் வெளியானால், மக்களால் கண்டிப்பாக அனைத்து படங்களையும் பார்க்க முடியாது தான். சினிமா வணிகமயமான நிலையில், வருடத்துக்கு சுமார் 300 தமிழ் படங்களை ரிலீஸ் செய்து வருகிறது.

2026 Half Yearly Kollywood Box Office Report and Recent Hit Movies Details are here

ஆனால், அதில், நல்லா இருக்கும் படங்களையும் ரசிகர்களை குடும்பமாக தியேட்டருக்கு வரவழைக்கும் படங்களையும் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் வெளியான நூறு சாமி, கான் சிட்டி மற்றும் கட்டா குஸ்தி 2 உள்ளிட்ட படங்கள் குறைவான பட்ஜெட்டில் உருவாகி அதிக லாபத்தை ஈட்டியுள்ளது தயாரிப்பாளர்களையும், தியேட்டர் ஓனர்களையும் டிக்கெட் வாங்கி தியேட்டருக்குச் செல்லும் ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

6 மாதங்களில் வெளியான வெற்றிப் படங்கள்: கடந்த ஆண்டு பல முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியானாலும் ரசிகர்களை அந்த படங்கள் பெரிதாக திருப்திப்படுத்த முடியாமல் ஏமாற்றியது. ஆனால், இந்த ஆண்டு முதல் 6 மாத காலத்தில் ஒவ்வொரு மாதமும் ஒன்று முதல் இரண்டு படங்கள் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்து வெற்றியடைந்துள்ளன. இந்த ஆண்டு இதுவரை மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி அதிக வசூலை ஈட்டிய படங்களின் பட்டியலை இங்கே பார்ப்போம்.

1. கருப்பு - 340 கோடி வசூல்
2. தாய் கிழவி - 90 கோடி வசூல்
3. யூத் - 82 கோடி வசூல்
4. பிளாஸ்ட் - 72 கோடி வசூல்
5. வித் லவ் - 40 கோடி வசூல்
6. தலைவர் தம்பி தலைமையில் - 40 கோடி வசூல்

நூறு சாமி வசூல்: இந்த 6 படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி நல்ல லாபத்தை ஈட்டி வெற்றியடைந்த படங்களின் வரிசையில் விஜய் ஆண்டனி, சுவாசிகா நடித்த சசி இயக்கிய நூறு சாமி படமும் இணைந்துள்ளது. சுமார் 12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் அதிகபட்சமாக 13 முதல் 14 கோடி வரை வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், ஓடிடி உரிமம், சாட்டிலைட் உரிமம் என படம் ஜஸ்ட் பாஸ் ஆகிவிட்டது.

கட்டா குஸ்தி 2 வசூல்: கட்டா குஸ்தி முதல் பாகம் 5 கோடியில் எடுக்கப்பட்டு 30 கோடி வரை வசூல் ஈட்டியது. இந்நிலையில், 20 கோடி பட்ஜெட்டில் உருவான கட்டா குஸ்தி 2 திரைப்படம் இதுவரை 23 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படம் தொடர்ந்து ஓடுவதால், அதிகபட்சம் 40 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த வாரம் வெளியாகும் படங்களில் இதயம் முரளி நல்ல வசூலை குவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் தமிழ் படங்கள் தப்பித்து வருகின்றன. பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X