கட்டுக்கோப்பான உடல் அழகு.. 21 டேஸ் சேலஞ்ச்... ட்ரெண்டாகும் உடற்பயிற்சி வீடியோ !

சென்னை : பிரபலங்கள் பலர் 21 டேஸ் சேலஞ்சில் இணைந்து தங்களின் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

Recommended Video

Day:2 | Chaithra Reddy into Yoga | Manimegalai funny video

கொரோனாவின் பாதிப்பு இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில். அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் உடலையும் மனதையும் சரியான நிலையில் வைத்து இருப்பது மிகவும் அவசியமாகும்.

 21 Days Challenge Exercise Video

இதனால் பிரபலங்கள் பலர் தங்களின் வீட்டிலேயே உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த உடற்பயிற்சி செய்வதை வீடியோ பதிவாக எடுத்து 21டேஸ் சேலஞ்ச் என்ற பெயரில் இணையத்தில் பகிர்ந்தும் வருகின்றனர் .

21 நாட்கள் தங்களை தாங்களே தனிமைபடுத்தி வீட்டில் இருப்பது அவ்வளவு சுலபமான விசயம் அல்ல. இதனால் பிரபலங்கள் பலரும் மனதையும் உடலையும் ஒரே நேரத்தில் கட்டுகோப்பாக வைத்து இருக்க உடற்பயிற்சியை கையில் எடுத்துள்ளனர்.

 21 Days Challenge Exercise Video

21 டேஸ் சேலஞ்சில் பல பிரபலங்கள் இணைந்து தங்களின் உடற்பயிற்சி வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இதில் நடிகர்கள் ஹரீஸ் கல்யாண், சாந்தனுவும் நடிகைகள் அதுல்யா ரவி மற்றும் ரம்யாவும் தங்களின் மாஸான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு அதை பகிர்ந்து வருகின்றனர்.

தற்போது தான் இந்த சேலஞ்ச் இணையங்களில் பிரபலமாகி வருவதால் பல இளைஞர்களும் இந்த சேலஞ்சிற்கு ஒத்துழைத்து தங்களின் உடற்பயிற்சி வீடியோக்களையும் பதிவு செய்து வருகின்றனர். இதே நேரத்தில் பல முன்னணி பிரபலங்களும் இந்த உடற்பயிற்சி சேலஞ்சில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

 21 Days Challenge Exercise Video

21 நாட்களில் இன்னும் 17நாட்கள் இருக்கும் நிலையில் மக்கள் தங்களின் உடல் நிலையை வீட்டில் இருந்தபடியே சரியாக வைத்து கொள்வது மிகவும் அவசியமாகும் என்று பிரபலங்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் தற்போது கொரோனாவால் 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைத்து மக்கள் தங்களின் வீடுகளிலே இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதற்காக பிரபலங்களுடன் இணைந்து வீட்டிலேயே உற்பயிற்சி செய்து உடலையும் மனதையும் திடப்படுத்திக் கொள்ளலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X