இஸ்லாமுக்கு எதிராக பேசியதாக கூறி ஷாருக் கானுக்கு தடை

பத்திரிகை ஒன்றுக்கு ஷாருக் கான் அளித்திருந்த பேட்டியில் நபிகள் நாயகம் குறித்து தவறாக தெரிவித்ததாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக இஸ்லாமிய வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் உ.பி. மாநிலம் பரேலியைச் சேர்ந்த தாருல் உலும் மஜாஹார் இஸ்லாம் மற்றும் இன்னொரு இஸ்லாம் அமைப்பு ஆகியவை ஷாருக் கானுக்கு 'பாத்வா' விதித்துள்ளன.
இதுகுறித்து அந்த அமைப்புகளைச் சேர்ந்த முப்தி மொய்தியூர் ரஹ்மான் ரிஸ்வி, முப்தி முகம்மது சுயூப் ரஸா கத்ரி ஆகியோர் கூறுகையில், இஸ்லாம் குறித்தும், நபிகள் நாயகம் குறித்து இப்படிக் கருத்துக் கூறிய ஷாருக் கான் இனியும் இஸ்லாமில் நீடிக்க முடியாது.
அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே நடந்த கல்யாணம் செல்லாது. அவர்களுக்கு இடையிலான உறவும் சட்டவிரோதமானது.
உடனடியாக ஷாருக் கான் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு சமாதி கட்டக் கூட இடம் கொடுக்கப்பட மாட்டாது என்று கடுமையாக கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











