ரஜினியைத் தொடர்ந்து கமலிடமும்ஆதரவு பெற்ற திமுக வேட்பாளர் ஜின்னா

ஆயிரம்விளக்கு தொகுதியில் திமுக சார்பில் ஹசன் முகம்மது ஜின்னா போட்டியிடுகிறார். நேற்று ரஜினிகாந்த்தைப் பார்த்து ஆதரவு பெற்றார். ரஜினியும் ஜின்னாவை வாழ்த்தினார். ரஜினியிடம் திமுக தேர்தல் அறிக்கையையும் கொடுத்தார் ஜின்னா.
இதேபோல இன்று நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ஜின்னா ஆதரவு பெற்றார். அப்போது ஜின்னாவை வாழ்த்திய கமல்ஹாசன், படித்த இளைஞர்கள் அரசியலில் ஈடுபட்டு, தேர்தலில் போட்டியிடுவது ஆரோக்கியமான திருப்பம் என்று கூறினார்.
Comments


Click it and Unblock the Notifications