நெப்போலியனின் மயோபதி மருத்துவமனைக்கு இலவச ஆம்புலன்ஸ்-கமல் ஒப்படைத்தார்

நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். தனது மகன் படும் பாட்டைப் பார்த்து வேதனையுற்ற நெப்போலியன் குறித்து அறிந்த வீரவநல்லூரைச் சேர்ந்த மருத்துவர் ராமசாமி, தனுஷுக்கு கட்டு சிகிச்சை அளித்து உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.
இதைப் பார்த்து நெகிழ்ந்து போன நெப்போலியன் தனது மகனைப் போல பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக அதே வீரவல்லூரில் இடம் வாங்கி பிரமாண்ட மருத்துவமனையை தொடங்கியுள்ளார்.
அங்கு சிகிச்சைக்காக வருவோருக்கு சிகிச்சை, தங்கும் வசதி, சாப்பாடு உள்ளிட்டவற்றை இலவசமாக அளிக்கிறார்கள்.
தற்போது இந்த மருத்துவமனைக்கு சென்னை அப்பல்லோ பொறியியல் கல்லூரி நி்ர்வாகத்தால் இலவச ஆம்புலன்ஸை வழங்கியுள்ளனர். இதை நெப்போலியனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொண்டு நடிகர் கமல்ஹாசன், நெப்போலியனிடம் ஆம்புலன்ஸை ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில் அப்பல்லோ கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் நடராசன், பேராசிரியர் டாக்டர் ஜெபராஜ், மற்றும் பேராசிரியர் டாக்டர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











