மும்பையின் பிரபல கமலிஸ்தான் ஸ்டுடியோ ரூ 200 கோடிக்கு விற்பனை!

By Sudha

மும்பை: பாலிவுட்டின் பிரபலமான ஸ்டுடியோவான கமலிஸ்தான் ரூ 200 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

மும்பை நகரின் லேண்ட்மார்க் எனப் புகழப்பட்ட ஸ்டுடியோ கமலிஸ்தான். 1958-ல் பட அதிபர் கமால் அம்ரோஹியால் கட்டப்பட்டது.

15 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஸ்டுடிவில்தான், இந்தியில் குறிப்பிடத்தக்க படங்களாகப் பார்க்கப்படும் ரஸியா சுல்தான், அமர் அக்பர் ஆன்டனி, காலியா போன்றவை தயாராகின.

மும்பை நகரின் மிகப் பிரதானமான சாலையில் அமைந்துள்ள கமலிஸ்தான் ஸ்டுடியோவின் மார்க்கெட் மதிப்பு ரூ 500 கோடி என்கிறார்கள். ஆனால் பூனாவைச் சேர்ந்த அவினாஷ் போஸ்லே என்ற ரியல் எஸ்டேட் அதிபர் கமலிஸ்தானை ரூ 200 கோடிக்கு வாங்கியுள்ளார்.

கமால் அம்ரோகியின் வாரிசுகள் மூவருக்குள் இந்த சொத்து தொடர்பாக பெரும் தகராறு எழுந்து, விவகாரம் நீதிமன்றம் வரை போனதால், இப்போது விற்கப்பட்டுள்ளது. வழக்கு, வில்லங்கம் இல்லாமலிருந்தால் நிச்சயம் ரூ 500 கோடிக்கு மேலேயே விற்பனையாகியிருக்கும் இந்த சொத்து என்கிறார்கள்.

மஹால் பிக்ஸர்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, இந்த ஸ்டுடியோவை அந்த நிறுவனத்துக்கு சொந்தமாக்கியிருந்தார் கமால் அம்ரோகி. அவருக்குப் பிறகு இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக, அம்ரோகியின் பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால் இவர்கள் படம் எடுக்கவில்லை. சண்டை போடவே நேரம் சரியாக இருந்தது.

அதுமட்டுமல்லாமல், ஏற்கெனவே இந்த மூவரும் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் பார்ட்டிகளிடம் தனித்தனியாக ரூ 60 கோடி வரை கடன் வாங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கமால் அம்ரோகியின் மகன்களில் ஒருவரான ஷாந்தார் (அதாவது கமலிஸ்தான் இயக்குநர்களில் ஒருவர்) சில வாரங்களுக்கு முன், நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை தத்தெடுத்து, சொத்து முழுவதையும் அவர் பெயருக்கு எழுதி வைப்பதாக அறிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X