கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற நடிகர் சங்க நிர்வாகிகள்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தலைவர் சரத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தென்னிந்திய நடிகர் சங்க வரலாற்றிலேயே இப்போதுதான் முதல் முறையாக போட்டியின்றி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து அவரது ஆசியைப் பெற்று, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கவிருப்பதாக சரத்குமார் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் சரத்குமார் தலைமையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசுகையில், முதல்வரை சந்தித்து ஆசி பெற வந்தோம். அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை அளித்துள்ளோம். உரிய முறையில் பரிசீலிப்பதாக உறுதியளித்தார் என்றார்.


Click it and Unblock the Notifications











