வேட்டைக்காரன், கந்தகோட்டை பட சிடிக்கள் பறிமுதல்!

அவர்களிடமிருந்து ஏராளமான திருட்டு டிவிடிக்கள், அவற்றுக்கு ஒட்டப்படும் கவர் தயாரிக்கும் எந்திரங்கள் உள்பட ரூ 25 லட்சம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள ஒரு அச்சகம்தான் திருட்டு சி.டி.க்களுக்கு கலர் அட்டைப்படங்களை திருட்டுத்தனமாக அச்சடித்து கொடுத்து வந்துள்ளது. இந்த விவரம் கிடைத்ததும், அச்சகத்தைத் தொடர்ந்து கண்காணித்த போலீசார், ஆதாரங்களோடு அச்சகத்தையும், அதை நடத்தி வந்தவர்களையும் முற்றுகையிட்டனர்,.
திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனிப்படை போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
வேட்டைக்காரன் சிடிக்கள்!
அப்போது அந்த அச்சகத்தில் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் வேட்டைக்காரன், கந்தக்கோட்டை, யோகி உள்பட பல புதுப்படங்களின் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிவிடி கவர்களையும், அவற்றைத் தயாரிக்க உதவிய கருவிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஏராளமான புதுப்பட டிவிடிக்களையும் அள்ளினர். இதைத்தொடர்ந்து அச்சகம் சீல் வைக்கப்பட்டது.
போலீஸ் சோதனையின்போது அங்கு இருந்த அச்சக அதிபர் காதர்முகைதீன் (வயது 26), சதீஷ் (20), சித்தி(19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


Click it and Unblock the Notifications











