மாயமான ஆசின் உதவியாளரைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைப்பு

ஆசினிடம் உதவியாளராக இருந்தவர் நல்லமுத்துக்குமார். இவரைக் காணவில்லை, ஆசின் குடும்பத்தினர் தனது மகனை எங்கேயோ மறைத்து வைத்திருப்பதாக அவரது தாயார் சுடலை வடிவு போலீஸில் புகார்க கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பொன்னேரி டி.எஸ்.பி. ரங்கராஜன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். நேற்ரு நடந்த விசாரணையில், 10 தினங்களுக்கு முன்னர் தான் மும்பை சென்றதாகவும் அப்போது நல்லமுத்து குமார் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் அவனை பார்த்ததாக கூறினார் என்று சுடலை வடிவு தெரிவித்தார்.
ஏற்கனவே புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் கொடுத்திருந்த சுடலை வடிவு நேற்று திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சாரங்கனிடமும் ஒரு புகார் கொடுத்தார்.
அதன்பேரில் பொன்னேரி டி.எஸ்.பி. ரங்கராஜன் தலைமையில் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் முதல்கட்ட விசாரணைக்காக மும்பை செல்கின்றனர்.
மேலும் நடிகை அசின், அவரது தந்தை ஜோசப் மற்றும் முத்துக்குமாரின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாகவும் ரங்கராஜன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











