ட்ரெண்டிங்ல் உள்ள #21YearsOfEpicSethu டேக்.. ட்விட்டரில் தெறிக்கவிடும் ரசிகர்கள்!

சென்னை: விக்ரம், அபிதா, சிவகுமார், ஸ்ரீமான் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் சேது.

இந்த படத்தை இயக்குனர் பாலா திரைக்கதை எழுதி இயக்கி இருந்தார். இசைஞானி இளையராஜா படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

டிசம்பர் 10ஆம் தேதியான இன்று சேது படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதை ட்விட்டரில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முக்கியமான படம்

முக்கியமான படம்

நடிகர் விக்ரம் 90க்களுக்கு மேல் இருந்து படங்கள் நடித்து வந்தாலும் மக்கள் மனதில் அவரை சிறந்த நடிகனாக பதிவு செய்த படம் சேது. மன நோயாளியாக வரும் கதாபாத்திரத்தில் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளை பெற்றார். சியான் என்னும் அடையாளம் விக்ரமுக்கு இந்த படத்தில் இருந்து தான் கிடைத்தது அது இன்று வரையும் நிலைத்து நிற்கிறது. இவ்வாறாக விக்ரமின் திரைப்பயணத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்த படம் சேது.

ஆரம்பமே அமர்க்களம்

ஆரம்பமே அமர்க்களம்

ஆரம்ப காலத்தில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் துணை இயக்குனராக பணி புரிந்த பாலா இயக்குனராக எடுத்த முதல் படம் சேது. விக்ரம் என்னும் நடிகரை அடையாளம் காட்டியது மட்டுமன்றி தன்னை ஒரு சிறந்த இயக்குனராக முதல் படத்திலேயே நிரூபித்து காட்டினார் பாலா. இன்று வரையில் சேது திரைப்படம் அவரது திரையுல வாழ்க்கையில் முக்கியமான படமாக உள்ளது.

மற்ற மொழிகளில் மறு ஆக்கம்

மற்ற மொழிகளில் மறு ஆக்கம்

சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது என சேது திரைப்படம் விருதுகளை அள்ளியது. அது மட்டுமன்றி பாலா & விக்ரம் இருவருக்கும் இந்த படத்திற்காக சில விருதுகள் வழங்கப்பட்டன. ஹிந்தி, கன்னடா, தெலுங்கு, பங்களாதேஷ், ஒடியா மொழியில் சேது திரைப்படம் மறு ஆக்கம் செய்ய பட்டது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

சேது படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக #21YearsOfEpicSethu என்னும் #டேக் போட்டு விக்ரமின் நடிப்பை பற்றியும், அர்ப்பணிப்பை பற்றியும் ரசிகர்கள் ட்வீட் போட்டு தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X