பிரபல நடிகர் திலகன் கார் மோதி இரு குழந்தைகள் பலி!

By Shankar

Thilakan
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் திலகனின் கார் மோதிரி கேரளாவில் 2 குழந்தைகள் பலியாகினர்.

மலையாளத்தில் பழம்பெரும் நடிகர் திலகன். நிலாம்பூரில் நடைபெற்ற 'ஐடியல் கப்பிள்' படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக பாலக்காட்டில் இருந்து நேற்று காலை காரில் சென்றார். காரை அவரே ஓட்டினார். அவருடன் உதவியாளர் சவிதாவும் சென்றார்.

பாண்டிக்காடு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஆட்டோ மீது திலகனின் கார் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

ஆட்டோவில் அதன் டிரைவர் பெரோஸ்கான், அவருடைய மனைவி ஜெசினா, குழந்தைகள் பர்வின்கான், பாத்திமா ஆகியோர் இருந்தனர். கார் மோதிய வேகத்தில் ஆட்டோ நொறுங்கியது. ஆட்டோவிலிருந்த 2 குழந்தைகளும் அங்கேயே துடிதுடித்து இறந்தனர். பெரோஸ்கானும், ஜெசினாவும் படுகாயம் அடைந்தனர். பாண்டிக்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கார் தலைகீழாக் கவிழ்ந்ததில் திலகனுக்கும் படுகாயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு கடுமையான நெஞ்சுவலியும் ஏற்பட்டதால் திலகனை பெருந்தலமன்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உதவியாளர் சவீதாவும் இதில் காயமடைந்தார்.

ஆட்டோ டிரைவர் பெரோஸ்கான், மனைவி ஜெசினாவை மஞ்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பலியான 2 குழைந்தகளின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மலப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தைகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே திலகன் தள்ளாமையில் அவதிப்பட்டு வந்தார். உதவியாளர் துணையின்றி அவரால் எங்கும் செல்ல முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் காரை அவரே ஓட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X